Moto பயனர்களுக்கு நற்செய்தி! Moto 5G ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவை அமல்!!
மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவை கிடைக்கச் செய்வதற்குத் தேவையான பணிகள் தொடங்கிவிட்டதாக மோட்டோரோலோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன், சாம்சங் ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து மோட்டோ நிறுவனமும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நெட்வொர்க்குகளுடன் இணைந்து 5ஜிக்கான பணிகளை தொடங்கின. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டோவின் எட்ஜ் ரக ஸ்மார்ட்போன்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையைப் பெறுவதற்கான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸ்டேண்ட் அலோன், நான் ஸ்டேண்ட் அலோன் என இரு பேண்ட் வகைகளிலும் உள்ள 5ஜி நெட்வொர்க் மோட்டோ ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏர்டெல், ஜியோ ஆகிய இரு நெட்வொர்க்குகள் வழங்கும் 5ஜி சேவைகளும் மோட்டோ ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்.
மேலும், மோட்டோவின் ஜி62, ஜி82, எட்ஜ் 30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் 5ஜி அப்டேட் வழங்கப்படும். மீதமுள்ள மற்ற மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன்களில் நவம்பர் மாதத்திற்குள்ளாக 5ஜி சேவை கிடைக்கச் செய்யப்படும்.
உலகிலேயே 16 இன்ச் திரையில், மிகக்குறைந்த எடையில் Acer லேப்டாப் அறிமுகம்!
சாம்சங், ரெட்மி, விவோ, ரியல்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் மோட்டோ ஸ்மார்ட்போனில் தான் அதிகளவில் 5ஜி பேண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பிக்சல், ஆப்பிள் ஐபோன் தவிர மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை விரைவில் கிடைக்கும்.