Asianet News TamilAsianet News Tamil

Moto ரசிகர்களே.. இதோ உங்களுக்காக.. கூலான AI அம்சங்களுடன் இந்தியாவிற்கு வருது Moto Razr 50 Ultra - விலை என்ன?

Moto Razar 50 Ultra : பிரபல Motorola நிறுவனத்தின் Razr 50 Ultra இன்னும் 3 நாள்களில் சீனாவில் அறிமுகமாகும் நிலையில், இந்த கைபேசி விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Motorola releasing new AI featured moto razr 50 ultra in india see price and specs ans
Author
First Published Jun 22, 2024, 5:47 PM IST | Last Updated Jun 22, 2024, 5:47 PM IST

இந்த புதிய Motorola Razor 50 Ultra அமேசான் வழியாக நாட்டில் விற்பனைக்கு வரும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவை Moto நிறுவனம் வெளியிட்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் Moto நிறுவனம் அண்மையில் இந்த புதிய போனில் உள்ள AI அம்சங்கள் குறித்து பேசியதும் அனைவரும் அறிந்ததே. 

மோட்டோரோலாவின் இந்த மடிக்கக்கூடிய கைபேசி 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. வெளிப்புறத் திரையில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

10 ஆயிரம் கூட இல்லை பாஸ்.. 10000 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ..

Motorola Razr 50 Ultra, அல்லது பிற நாடுகளில் Razr+ 2024 என்று அழைக்கப்படும் இந்த போனில் Snapdragon 8s Gen 3 சிப்செட் மற்றும் 12GB RAM மற்றும் 256GB ROM பொருத்தப்பட்டிருக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் தெரிவித்தது. மேலும் இந்த கைபேசியில் 3.6 இன்ச் கவர் டிஸ்பிலே மற்றும் 6.9 இன்ச் இன்னர் டிஸ்ப்ளே இடம்பெறும்.

அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இது எப்போது அறிமுகமாகும் என்பதற்கான எந்த தகவலும் இப்பொது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 25 அன்று சீனாவில் Razr 50 Ultra அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆகவே இம்மாத இறுதிக்குள் அது இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.

20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios