MOTO : வுட் அமைப்பு கொண்ட பேனல்.. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Moto Edge 50 Ultra - என்ன விலை இருக்கும்?
Motorola Edge 50 Ultra : பிரபல மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு ஏற்கனவே சில அசத்தல் போன்களை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் தனது ப்ரீமியம் போன் ஒன்றை வெளியிடவுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 50 அல்ட்ரா போனை, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளவில் தனது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனுடன் அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே எட்ஜ் 50 Fusion இந்தியாவில் 25,000 என்ற விற்பனையாகி வரும் நிலையில், விரைவில் மோட்டோ தனது பிரீமியம் போனான அல்ட்ரா பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 SoC மற்றும் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 50 வரிசையில் உள்ள மற்றொரு போன் இதுவாகும். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நத்திங் ஃபோன் (3)... சி.எம்.எஃப். ஃபோன் (1)... சஸ்பென்ஸ் வைத்து டீஸர் வெளியிட்ட நத்திங்!
மோட்டோரோலா இந்தியா எக்ஸ் தளத்தில் "விரைவில்" என்ற டேக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனின் டீசரைப் பகிர்ந்துள்ளது. சிறப்பான மர அமைப்புடைய பின்புற பேனல் மற்றும் கேமரா யூனிட் இந்த புதிய போனில் இடம்பெற்றுள்ளது. முதல் முறையாக வுட் அமைப்பை கொண்ட பின்புற பேனல் கொண்ட ஒரு போனை மோட்டோ அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, 6.7 இன்ச் 144 ஹெர்ட்ஸ் முழு-எச்டி+ பிஓஎல்இடி திரையைக் கொண்டுள்ளது. இது Qualcomm's Snapdragon 8s Gen 3 SoC மூலம் 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 உள் சேமிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Hello UI உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரை 80,000 முதல் 90,000 என்ற விலையில் இது அறிமுகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வீவோ எஸ் ஃபோல்டு ப்ரோ இந்தியாவில் ரிலீஸ்! ஒன்பிளஸ், ஓப்போ எல்லாத்தையும் ஓரங்கட்ட போகுது!