வந்துவிட்டது Motorola Edge 30 Ultra, Edge 30 Fusion.. நம்பி வாங்கலாமா?

மோட்ரோலா எட்ஜ் 30 நிறுவனமானது  ஃபியூஷன், எட்ஜ் 30 எனஇரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எட்ஜ் 30 அல்ட்ராவின் யூரோ விலை 60,000 முதல் 70,000 வரை இருந்தது. ஆனால், இந்தியாவில் அறிமுக விலையாக 54,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளனர். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் 144 ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிலே ஸ்க்ரீன், ஸ்னாப்ட்ராகன் 8 + உள்ளது.

Motorola Edge 30 Ultra and Edge 30 Fusion launched in India check price and features here

மோட்ரோலா எட்ஜ் 30 நிறுவனமானது  ஃபியூஷன், எட்ஜ் 30 எனஇரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எட்ஜ் 30 அல்ட்ராவின் யூரோ விலை 60,000 முதல் 70,000 வரை இருந்தது. ஆனால், இந்தியாவில் அறிமுக விலையாக 54,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளனர். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் 144 ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிலே ஸ்க்ரீன், ஸ்னாப்ட்ராகன் 8 + உள்ளது.

மோட்ரோலாவின் முதல் 8+ ஜென் ஃபோன் இது தான் . இதைத்தவிர 200 Mp கேமராவும் உள்ளது. இந்தியாவில் முதல் 200 மெகாபிக்சல் கேமரா உள்ள ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கக்கூடும் . இது வரை அதிகாரப்பூர்வமாக யாரும்  200 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவில்லை. மோட்டோ நிறுவனம் முதலில் சைனாவில் அறிமுகம் செய்தனர் பின்னர் உலக அளவில் அறிமுகம் செய்தனர். தற்பொழுது இந்தியாவில் இது தான் 200 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனாக உள்ளது. 

இதையும் படிங்க;- வட்டிக்கு குட்டி போடும் கடன் செயலிகளுக்கு ஆப்பு.. மத்திய அரசு அதிரடி..!

இதன் தரத்தை பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, எனவே சிறிது நாள் கழித்துதான் 200 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனின் தரம் குறித்த விவரங்கள் தெரியவரும்.  இதைத்தவிர வேப்பர் சேம்பர் கூலிங் இதில்  உள்ளது. 125 வாட்ஸ் டர்போ பவர் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய வசதியும் இதில் உள்ளது. இதுவும் மோட்ரோலா நிறுவனத்தின் தரப்பில் முதன்முதலில் அறிமுகமாகும் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யக்கூடிய வசதியாகும். இதற்கு முன்னர் 67 வாட்ஸ் 68 வாட்ஸ் மட்டுமே இருந்தது.  அந்தவகையில், முதல் முறையாக 120 வாட்ஸ் சார்ஜ் செய்யக்கூடிய வசதி மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போனில் உள்ளது. 

இதைத்தவிர 50 Mp அல்ட்ரா வாட் கேமராவும் உள்ளது. மேக்ரோ ஆப்ஷன்சும் இதில் உள்ளது .இதில் 2x டெலி ஃபோட்டோ மட்டுமே உள்ளது. இதில் 5x டெலி ஃபோட்டோ வசதி இல்லை.இதை உருவப்படத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 200 Mp கேமரா உள்ளதால் சூமிங் வசதி நன்றாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதில் வளைந்த தொடு திரை உள்ளது. 60 Mp முன் பக்க கேமராவும் உள்ளது. இதில் நாம் 8k வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. போனின் முன்பக்க, பின் பக்கங்கள்  கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியும், ஆண்ட்ராய்டு 12 செயல்பட்டுக்கொண்டுள்ளது 2 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வரையில் இது உதவும் என்றும், மூன்று வருடத்திற்கு செக்யூரிட்டி அப்டேட்கள் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

விலை அதிகமாக  கொடுத்து வாங்கினாலும் அப்டேட்கள் கம்மியாக தான் உள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரையில், மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 4610 mAh சக்திகொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 125 வாட்ஸ் சார்ஜிங், 50 வாட்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் செய்துகொள்ளலாம். இதில் ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங்கும் செய்து கொள்ளலாம். இதில் ஒரே ஒரு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலையானது 54,999 ஆகும்.  சந்தையில் 55,000 ரூபாய்க்கு 8gb 128 mp வேறு மாடல்களில் இல்லை. ICICI பேங்க்கிற்கு 3,000 தள்ளுபடி என குறிக்கப்பட்டுள்ளது.அதனால் மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை 52,000 ரூபாய்க்கு விற்பனை என்று விளம்பரம் செய்கின்றனர்.

இதையும் படிங்க;-  Youtube Ad கொடுமை! இனி 5 விளம்பரங்களை பார்த்த பின்பு தான் வீடியோவையே பார்க்க முடியும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios