Youtube Ad கொடுமை! இனி 5 விளம்பரங்களை பார்த்த பின்பு தான் வீடியோவையே பார்க்க முடியும்!!
யூடியூப்பில் தவிர்க்க முடியாத விளம்பரங்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்துவதற்கான சோதனையை மேற்கொண்டுள்ளது. இது பயனர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை கிளப்பியுள்ளது.
யூடியூப் வீடியோ தளத்தில் நாளுக்கு நாள் விளம்பரங்களின் தொல்லை தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரேயொரு விளம்பரத்தை மட்டும் காட்டி வந்தது. அதுவும் 5 நொடிகளில் தவிர்த்து விட்டு வீடியோவுக்குள் செல்லும் வகையில் இருந்தது. பின்னர், ஒரு விளம்பரம் இரண்டானது, இரண்டு மூன்றானது. 5 நொடியில் விளம்பரங்களை தவிர்க்கும் முறை நீக்கப்பட்டது. 20 நொடிகள் விளம்பரங்கள் என்றாலும், முழு விளம்பரத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு பயனர்கள் கொண்டு வரப்பட்டனர்.
மேலும் படிக்க:ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யாதீர்! அதிகரிக்கும் சிக்கல்..!
இதன் உச்சக்கட்டமாக தற்போது 5 விளம்பரங்கள் வரையில், அதுவும் ஒரே நேரத்தில் அடுத்ததடுத்து வைக்கப்பட்டு, திணிப்பதற்கான சோதனையை யூடியூப் செய்து வருகிறது.. யூடியூப்பில் வீடியோவை கிளிக் செய்ததும், தொடக்கத்திலேயே 5 விளம்பரங்களை அடுக்கி விடுகிறது. இந்த சோதனை முயற்சியை பயனர் ஒருவர் போட்டோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/DonUpdates_in/status/1569917661055963139?s=20&t=Mi4A5IingHMLCXrEUXxZ-A
இதில் கொடுமை என்னவென்றால், 1 நிமிடம் வீடியோக்களை பார்க்க வேண்டுமென்றால் கூட, 2 நிமிடம் விளம்பரங்களை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும், விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்க வேண்டுமென்றாறல், யூடியூப் பிரீமியம் சந்தாவுக்கு மாறுங்கள் என்று யூடியூப் சூட்சுமாக வாடிக்கையாளர்களை உள்ளே இழுக்கிறது.
மேலும் படிக்க:iQOO: ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸருடன் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஒருபுறம் விளம்பரங்கள் இப்படி திணிக்கப்பட்டு வருகிறது என்றாலும், மறுபுறம் விளம்பரத்தை தடுக்கும் எக்ஸ்டென்சன்கள், மென்பொருள்களை பயனர்கள் நிறுவி வருகின்றனர். யூடியூப்பில் விளம்பரங்களைத் தடுப்பதற்கு என பிரத்யேகமாக Ad block for Youtube கூகுள் குரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் நீட்டிப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யூடியூப்பில் விளம்பரங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து அறிய இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்
அட இப்படி ஒரு ஐடியா இல்லாம போச்சே! இனி விளம்பரங்களே இல்லாமல் Youtube பார்க்கலாம்!!