சுட்டீஸ்-க்கு ஏற்ற ஏராள விஷயங்கள் நிறைந்த ரோபோட் இந்தியாவில் அறிமுகம்
மிக்கோ 3 ஏ.ஐ. ரோபோட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கல்வி பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட ரோபோட் ஆகும்.
குழந்தைகளுக்கான மிக்கோ 3 ரோபோட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது. இது உலகில் தற்போது கிடைக்கும் ரோபோட்களை விட தலைசிறந்த கல்வி பயன்பாட்டை வழங்கும் என மிக்கோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 5 முதல் 10 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதிகபட்சமாக எட்டு மொழிகளில் பேசும் மிக்கோ 3, பெரிய டச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இது கோடிங் சார்ந்த பாடங்களை எடுக்கும். மேலும் இதில் வைடு ஆங்கில் HD கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ரோபோட் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் Lingokids, Da Vinci Kids, Kidloland, Cosmic Kids, Out of This Word, Tiny Tusks, Dreamykid, மற்றும் பல்வேறு இதர செயலிகளின் தரவுகள் அனைத்தும் ஒற்றை சந்தாவின் கீழ் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேம்கள், வீடியோக்கள், ஸ்டோரிக்கள், பாடல்கள், கோடிங் அனுபவங்கள் மற்றும் யோகா வகுப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. சிறுவர்களின் பயன்பாட்டை பெற்றோர் கவனிக்கும் வகையில் மிக்கோ பேரண்ட் ஆப் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரோபோட் தரவுகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதோடு மேம்பட்ட என்க்ரிப்ஷனில் வைக்கப்படுவதாக மிக்கோ தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் புதிய மிக்கோ 3 விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் மிக்கோ வலைதளத்தில் நடைபெறுகிறது. மிக்கோ வலைதளத்தில் இந்த ரோபோட் தற்போது ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மிக்கோ 3 ரோபோட் மார்ஷியன் ரெட் மற்றும் பிக்சி புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.