மெட்டா நிறுவனத்தின் புதிய ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள் பெரும் தனியுரிமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த செயல்முறை, பயனர்களின் தனிப்பட்ட தருணங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகள் குறித்து தற்போது பெரிய தனியுரிமை சர்ச்சை எழுந்துள்ளது. மெட்டா Ray-Ban என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த கண்ணாடிகளில் கேமரா மற்றும் மைக்ரோஃபோன் உள்ளது. பயனர் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நேரங்களில் ஏஐ மாடல்களைப் பயிற்சி செய்யும் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தரவுகளை ஆய்வு செய்யும் பணியை கென்யாவின் நைரோபியில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் மேற்கொள்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சில சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இந்த காட்சிகளை “டேட்டா அனோடேட்டர்கள்” என்று அழைக்கப்படும் பணியாளர்கள் ஆய்வு செய்து லேபிள் செய்கிறார்கள். ஏஐ மாடல்களை பயிற்சி செய்ய இது பொதுவாக பயன்படுத்தப்படும் செயல்முறை ஆகும். ஆனால் இந்த பணியில் ஈடுபட்ட சிலர், அவர்கள் பார்ப்பது பல நேரங்களில் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சேர்ந்த காட்சிகளாக இருக்கிறது.

சில வீடியோக்களில் வீட்டின் உட்புற காட்சிகள், தனிப்பட்ட தருணங்கள் போன்றவை பதிவாகியுள்ளதாக அந்த பணியாளர்கள் கூறியுள்ளனர். சில சமயங்களில் பயனர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறியாமலும் இருக்கலாம் என்று அவர்கள் பதிவு செய்கிறார்கள். மேலும் சில காட்சிகளில் தவறுதலாக வங்கி கார்டு விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் கூட தெரியும்.

இந்த பணியை செய்யும் ஊழியர்கள், வேலை இழக்கும் அச்சத்தால் வீடியோக்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். தனியுரிமை தொடர்பான கேள்விகளை எழுப்பினால் வேலைக்கு ஆபத்து என்ற அச்சமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்டா நிறுவனம் தனது, ஏஐ உடன் பயனர்கள் மேற்கொள்ளும் கொள்கைகள் சில நேரங்களில் மனிதர்களாலும் ஆய்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பயனர்கள் மிகுந்த தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்டா மற்றும் EssilorLuxottica இணைந்து தயாரிக்கும் இந்த ஏஐ கண்ணாடிகள் 2025 ஆம் ஆண்டில் சுமார் 7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.