வாஷிங்டன், மார்ச் 30-

மிகவும் பழைய மாடல் ஸ்மார்ட்போன்களில் இயங்கும் பேஸ்புக் ஆப்ஸ், மெசஞ்சர் ஆப்ஸ்களை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வி55 பேஸ்புக் ஆப்ஸ், வி10 மெசஞ்சர் ஆகியவை நிறுத்தப்பட உள்ளது.மேலும் விண்டோஸ் ஸ்மார்ட்போனிலும் பேஸ்புக் ஆப்ஸ் செயல்பாடு நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“ திடீரென நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் உள்ள போஸ்புக் ஆப்ஸ், மெசஞ்சர் ஆப்ஸ் செயல்படாமல் போகலாம். ஆதலால், பேஸ்புக் லைட் அல்லது நவீன வெர்சனுக்கு அதை மேம்படுத்திக்கொள்ளுங்கள். புதிய அப்டேட் வெர்சனை மேம்படுத்த நாங்கள் சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.

புதிய பேஸ்புக் ஆப்ஸில், வாய்ஸ், வீடியோ காலிங், கேம்ஸ், மெசஞ்சர் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.ஆதலால், இனி பழைய வெர்சன் பேஸ்புக், மெசஞ்சர் நீண்டநாட்களுக்கு பயன்படுத்த முடியாது.

குறிப்பாக ஐபாட் வி26, வி8, விண்டோஸ் போன் 8, மற்றும் 8.1 ஆகிய மாடல்களில் பேஸ்புக், மெசஞ்சர் விரைவில் நிறுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.