புதிய சிறப்பம்சங்களுடன் வெளியானது மாருதி சுசுகி ஆல்டோ 800 உத்சவ் எடிஷன்...
இந்தியாவில் புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய மாருதி சுசுகி ஆல்டோ 800 உத்சவ் எடிஷன் வெளியாகியுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் செல்லும்.
புதிய ஆல்டோ 800 உத்சவ் எடிஷன் விலை சாதாரண மாடலை விட ரூ.20,000 வரை அதிகம்.
இந்தியாவில் ஆல்டோ 800 உத்சவ் எடிஷன் விலை ரூ.3.94 லட்சம்.
புதிய எடிஷனில் புதிய சீட் கவர்கள், ORVM இன்டிகேட்டர், டோர் சீல் கார்டு, பம்ப்பர் மற்றும் டெயில் லேம்ப்க்ளில் க்ரோம் அக்சென்ட் இணைக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கேபினின் உள்புறம் முழுமையான கருப்பு நிற சீட் மற்றும் சிவப்பு நிற ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.
800சிசி மூன்று சிலிண்டர் இன்ஜின் . இந்த இன்ஜின் 48hp மற்றும் 69 Nm செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.