Lenovo Legion Y90 : 16GB ரேம், ஃபிளாக்ஷிப் பிராசஸருடன் கேமிங் போன் வெளியிடும் லெனோவோ
லெனோவோ நிறுவனத்தின் புதிய லீஜியன் Y90 கேமிங் போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
லெனோவோ நிறுவனம் தனது லீஜியன் Y90 கேமிங் போன் சீன சந்தையில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவல் லெனோவோ வெய்போ பதிவில் வெளியிட்டது. எனினும், புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியீட்டு தேதி அடங்கிய டீசரில் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 28 உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணி) துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் லெனோவோ லீஜியன் லோகோ இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்களை லெனோவோ வீடியோ வடிவில் வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.
லெனோவோ லீஜியன் Y90 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
புதிய லெனோவோ லீஜியன் Y90 ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16GB ரேம், 512GB மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 16MP இரண்டாவது கேமரா, 44MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5ஜி, 4ஜி எல்.டி.இ., இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5600mAh பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி லெனோவோ லீஜியன் Y700 பெயரில் கேமிங் டேப்லெட் ஒன்றை வெளியிட இருப்பதை உணர்த்தும் டீசர் வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதில் இந்த டேப்லெட் 8.8 இன்ச் ஸ்கிரீன், ஒற்றை பிரைமரி கேமரா, 6550mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வவசதி வழங்கப்படுகிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த டேப்லெட் ஆறு மணி நேரத்திற்கான கேமிங் அனுபவத்தை வழங்கும்.