மலிவு விலையில் 5ஜி போன் உருவாக்கும் லாவா.. இவ்வளவு தானா?

லாவா பிளேஸ் 5ஜி மாடலில் 6.78 இன்ச் எல்.சி.டி. பேனல், 2460x1080 பிக்சல் FHD+ ரெசல்யூஷன், மீடியாடெக்  டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

Lava Blaze 5G tipped to be priced under Rs 10,000

லாவா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புது 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் லாவா பிளேஸ் 5ஜி என அழைக்கப்பட இருக்கிறது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் புது லாவா 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. 

புதிய லாவா பிளேஸ் 5ஜி மாடலில் நான்கு கேமரா சென்சார்கள் கொண்ட கேமரா பம்ப், பின்புறம் கிளாஸ் பேக், வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி அந்நிறுவனம் எந்கத தகவலையும் வழங்கவில்லை. 

Lava Blaze 5G tipped to be priced under Rs 10,000

அம்சங்களை பொருத்தவரை லாவா பிளேஸ் 5ஜி மாடலில் 6.78 இன்ச் எல்.சி.டி. பேனல், 2460x1080 பிக்சல் FHD+ ரெசல்யூஷன், மீடியாடெக்  டிமென்சிட்டி 810 பிராசஸர், மாலி G57 GPU, 8GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. 

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 5MP வைடு ஆங்கில் லென்ஸ், இரண்டு 2MP சென்சார்கள் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

லாவா பிளேஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.78 இன்ச் எல்.சி.டி. பேனல், 2460x1080 பிக்சல் FHD+ ரெசல்யூஷன்
- மீடியாடெக்  டிமென்சிட்டி 810 பிராசஸர்
- மாலி G57 GPU
- 8GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- 64MP பிரைமரி கேமரா
- 5MP வைடு ஆங்கில் லென்ஸ்
- இரண்டு 2MP சென்சார்கள் 
- 16MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி 
- 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios