Asianet News TamilAsianet News Tamil

Google Chrome ப்ரவுசரில் ஆபத்து, உடனே அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தல்!

பிரபல கணினி, மொபைல் ப்ரவுசரான Chrome இல் ஒரு குறைபாடு உள்ளதாகவும், எனவே பயனர்கள் புதிய பாதுகாப்பு அப்டேட் செய்யுமாறும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
 

latest update of Google Chromes has a security fix you should install now
Author
First Published Sep 7, 2022, 6:16 PM IST

உலகில் பெரும்பாலானோர் கூகுள் குரோம் பிரவுசரை பயன்படுத்தி  வருகின்றனர். அதிவேகமான இன்டர்நெட், இமேஜ் பார்வை திறன், பல்வேறு கோப்புகளுக்கான ஆதரவு என அதிகப்படியான சிறப்பம்சங்கள் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளன. 

இந்த நிலையில், சமீபத்தில் கூகுள் குரோம் பிரவுசரில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. குரோமிலுள்ள இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஹேக்கர்கள், கணினியை எளிதில் ஹேக் செய்து வந்ததாகவும் கூறப்பட்டது. 

இதனையடுத்து இந்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், கணினிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, குரோமில் புது அப்டேட் ஒன்றை கூகுள் வழங்கியுள்ளது.

இது குறித்து கூகுள் தரப்பில் கூறுகையில், குரோம் பிரவுசரில் உள்ள சிக்கல், அது இயக்கப்படும் கணினியின் அமைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களிடம் இல்லை. இருப்பினும், Google பயனர்களிடம் இருந்து சில எச்சரிக்கை வந்துள்ளதால், பிரச்சனை தீவிரம் குறித்து ஆராய வேண்டியுள்ளது. 

Chrome பயனர்கள் தங்கள் ப்ரவுசரை இப்போதே அப்டேட் செய்ய வேண்டும். அவ்வாறு அப்டேட் செய்தவுடன், பயனர்கள் தங்களது கணினியை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின்பு, உங்கள் கணினியில் உள்ள Chrome வெர்சன் 105.0.5195.102 ஆக இருக்க வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு அம்சங்களைப் மேற்கொள்வதால், புதிய அப்டேட்டானது  உங்கள் Windows, Mac அல்லது Linux PC ஐ இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் கூகுள் குரோம் எந்த வெர்ஷன் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் கணினியில் உள்ள Chrome ஆனது, புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் இயக்குகிறதா அல்லது இன்னும் பழைய பதிப்பிலேயே இயங்குகிறதா என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Hangouts : கூகுளின் பிரபல சேவை முடிவுக்கு வருகிறது! பயனர்கள் அதிர்ச்சி!!
 

இதற்கு குரோம் பிரவுசரில், மேல்-வலதுபுறத்தில் மூன்று-புள்ளிகள் இருக்கும். அந்த புள்ளி மெனுவைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு, About Chrome-ஐ  கிளிக் செய்து, நீங்கள் உங்கள் கணினியில் இயங்கும் பதிப்பைப் தெரிந்து கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios