Asianet News TamilAsianet News Tamil

Hangouts : கூகுளின் பிரபல சேவை முடிவுக்கு வருகிறது! பயனர்கள் அதிர்ச்சி!!

வருகின்ற நவம்பர் 1 முதல் கூகுள்  ஹேங்அவுட்ஸ் (Hangouts) செயல்படாது என்றும், அதற்கு பதிலாக கூகுள் சேட் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

You can now mark the shutdown of Google Hangouts on your calendar
Author
First Published Sep 6, 2022, 2:17 PM IST

ஹேங்அவுட்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தின் ஒரு சாட் (chat) சேவையாகும். தற்போது வரை இதனை கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு இலவச சேவையாக வழங்கி வருகின்றது. ஜிமெயிலுடன், இந்த சாட் வசதியையும் பயன்படுத்தி வந்த பயனர்கள், வரும் நவம்பர் முதல் கூகுள் இமெயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் சாட் சேவையை பயன்படுத்தலாம்.

ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தி சாட் செய்து வந்தவர்கள் அதில் உள்ள தரவுகள், உள்ளடக்கங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023க்கு பின்னர்  ஹேங்அவுட்ஸ் தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும். நவம்பர்  1ம் தேதியுடன் ஹேங்அவுட்ஸ் சேவை நிறுத்தப்பட்டாலும், அதில் உள்ள தரவுகளை பயனர்கள் ஜனவரி 1ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் Google Takeout என்பதற்கு சென்று நீங்கள் ஹேங்அவுட்ஸ் பயன்படுத்தும் கூகுள் கணக்கில் லாகின் செய்யவும். பின்னர் அப்ளிகேஷன் பட்டியல் தோன்றும். அதில் ஹேங்அவுட்ஸ் என்பதைத் தேர்வு செய்யவும். அதில் Next Step என்பதை அடுத்ததாக தேர்வு செய்து, Delivery Method என்ற விருப்பம் தோன்றும். அதில் One time download என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! வருகிறது "Flipkart Big Billion Days"!!
 

அடுத்ததாக பைல் வகையைத் தேர்வு செய்து, Export என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் ஹேங்அவுட்ஸ் கணக்கில் இருந்து Google அனைத்து தரவுகளையும் நகல் எடுக்கிறது என்ற செய்தி தோன்றியதும், இந்த பிராசஸ் முடிந்தவுடன் உங்களுக்கு ஒரு பைலுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த பைலில் உள்ள ஹேங்அவுட்ஸ் டேட்டா முழுவதும் இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios