Jio Satellite Internet: குக்கிராமங்களுக்கு இன்றும் சரியான நெட்வொர்க் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ரிலையன்ஸ் ஜியோ ஒரு பெரிய திட்டத்தோடு களமிறங்கப் போகுது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இப்போதெல்லாம் இன்டர்நெட் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. படிப்பு, வேலை, ஆன்லைன் சேவைகள், வீடியோ கால் என எல்லாத்துக்குமே வேகமான இன்டர்நெட் தேவைப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் இன்னும் பல கிராமங்களில் மொபைல் நெட்வொர்க்கோ, ஃபைபர் இன்டர்நெட்டோ சரியாக கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட, ரிலையன்ஸ் ஜியோ ஒரு பிரம்மாண்டமான திட்டத்துடன் களமிறங்கப் போகிறது.
ஜியோவின் சாட்டிலைட் இன்டர்நெட் எப்படி வேலை செய்யும்?
கிடைத்த தகவல்களின்படி, ஜியோ நிறுவனம் Low Earth Orbit (LEO) எனப்படும் தாழ்வட்டப் பாதையில் சுமார் 1,600 சாட்டிலைட்களை அனுப்பத் தயாராகி வருகிறது. பூமியிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் உயரத்தில் இந்த சாட்டிலைட்கள் நிலைநிறுத்தப்படும். இந்த சாட்டிலைட்கள் மூலம், நாடு முழுவதும் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எங்கெல்லாம் மொபைல் டவர் அமைக்கவோ, ஃபைபர் கேபிள் கொண்டு செல்லவோ முடியவில்லையோ, அங்கெல்லாம் சாட்டிலைட் மூலமாக நேரடியாக இன்டர்நெட் சேவையை கொடுக்க முடியும். கிராமங்கள், நமது ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான மலைப்பகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கூட அதிவேக இன்டர்நெட் கொடுக்க இது ஒரு சூப்பர் வாய்ப்பாக இருக்கும். தரையில் பெரிய டவர், ஃபைபர் நெட்வொர்க் என்று எதுவும் இல்லாமலேயே, சாட்டிலைட் மூலமாக பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை வீடுகளுக்கு கொண்டு வர முடியும். இந்த டெக்னாலஜியைத்தான் பல சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
WhatsApp Trick: நெட் ஆன்ல இருந்தாலும் சிங்கிள் டிக் தான் காட்டும்! இந்த சூப்பர் ஹேக் தெரியுமா?
ஜியோவின் இந்த சேவை எப்போது தொடங்கும்?
ரிப்போர்ட்களின்படி, 2027-ல் சில சாட்டிலைட்களை வைத்து ஜியோ தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கலாம். இதைத் தொடர்ந்து, 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் சாட்டிலைட்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. 2030-க்குள் 400 முதல் 500 சாட்டிலைட்களை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது ஜியோவின் இலக்கு. படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்து, 2035-க்குள் சுமார் 1,600 சாட்டிலைட்களைக் கொண்ட முழுமையான நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
Flipkart: வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. பிளிப்கார்ட் மெகா ஷாப்பிங் திருவிழா.. பிக் பில்லியன் டேஸ்!
ஸ்டார்லிங்குடன் நேரடிப் போட்டி
ஜியோவின் இந்த திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியாவின் சாட்டிலைட் இன்டர்நெட் சந்தையில் போட்டி கடுமையாகும். ஜியோவின் மிகப்பெரிய போட்டியாளராக எலான் மஸ்க்கின் Starlink நிறுவனம் இருக்கும். அதோடு, Amazon Leo நிறுவனத்துடனும் ஜியோ போட்டியிட வேண்டியிருக்கும். தற்போதைக்கு, ஸ்டார்லிங்கின் சாட்டிலைட்கள் சுமார் 550 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வருகின்றன. ஆனால், ஜியோ திட்டமிட்டுள்ள சாட்டிலைட்கள் சுமார் 650 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இதனால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சாட்டிலைட் இன்டர்நெட் சந்தையில் ஜியோ, ஸ்டார்லிங்க் மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையே ஒரு பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


