Asianet News TamilAsianet News Tamil

இலவசங்களை அள்ளி வழங்கும் ஜியோ… அடுத்த அதிரடி திட்டம் என்ன தெரியுமா ?

Jio Reliance will announce new scheme soon 1100 GB Data free
Jio Reliance will announce new scheme soon 1100 GB Data free
Author
First Published May 6, 2018, 11:04 PM IST


வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி அளவுக்கு  இலவச டேட்டாவை வழங்க ரிலையனஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் தொடங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் இதற்கான சோதனையை ரிலையன்ஸ் நிறுனம் தொடங்கியுள்ள  நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது.

Jio Reliance will announce new scheme soon 1100 GB Data free

சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. 

விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஃபைபர் சேவை துவங்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Jio Reliance will announce new scheme soon 1100 GB Data free

தற்போது  ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.

அதே நேரத்தில்  ஜியோ ஃபைபர் இணைப்புக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.4500 வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைகாட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.. 

Jio Reliance will announce new scheme soon 1100 GB Data free

இந்தியா முழுக்க மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், ஃபைபர் சேவைகள் அதிவேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்ப்த்து காத்திருக்கினறனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios