jio offers free smartphones

ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நேற்று முன்தினம் கூட,ஜியோ பைபர் நெட் சேவையை வெறும் 5௦௦ ரூபாய்க்கு 100 ஜிபி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

நேற்று, INDIA KA SMARTPHONE (JIO PHONE ) அறிமுகமானது. அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.

ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE ))

ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 22 முதல் முன்பதிவு செய்யலாம் என இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்