ஜியோ விற்பனை அதிரடி நிறுத்தம்..! திணறும் அம்பானியின் ரிலையன்ஸ்..!

jio mobile sales stopped suddenly
jio mobile sales stopped suddenly


ஜியோ விற்பனை அதிரடி நிறுத்தம்

ஜியோவின் ஒவ்வொரு அறிவிப்பும்  சலுகையாக தான் இருக்கக்கூடும் என நினைக்கும்  அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது ஜியோ. இதனை தொடர்ந்து இலவச டேட்டா சேவை முதல்  இலவச மொபைல் வரை அனைத்திலும்  ஒரு கலக்கல் செய்கிறது  ஜியோ.

அந்த வரிசையில் ரூ. 15௦௦  இல், ஜியோவின்  இலவச  ஸ்மார்ட் போனை  பெறுவதற்கு  ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவை செய்யலாம் என தெரிவித்து இருந்தது. அதுவும்  இலவசம் என்றால் யார்தான் முன்பதிவு செய்யாமல் இருப்பார்கள்.

அதாவது மொபைல் முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்படும் ரூ. 15௦௦- ஐ 3 வருடங்களுக்கு  பின்,  அதே கட்டணத்தை திருப்பி கொடுத்துவிடும் ஜியோ

திணறும் அம்பானியின் ரிலையன்ஸ்

இந்நிலையில்  கடந்த  24 ஆம் தேதி  மாலை 5 மணி முதல்  ஜியோவின் இலவச போன் பெறுவதற்கான  முன்பதிவு தொடங்கியது. அன்று முதல்  நேற்று  வரை (  ஆகஸ்ட் 24  முதல் ஆகஸ்ட் 27 )  இந்த  மூன்று நாட்கள் மட்டுமே,  முன்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையில்  பல லட்ச  கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளதால், நிலைமையை  சமாளிக்க ஜியோ அதிரடியாக  தன்னுடைய  விற்பனையை  நிறுத்தியது.இதனை தொடர்ந்து  கடந்த 3 நாட்களில்  மட்டும்   முன்பதிவு செய்தவர்களுக்கு  இலவச போன்  கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,

மேலும் பல வாடிக்கையாளர்கள்,  ஜியோ மொபைல்  பெரும் வாய்ப்பை  தவற  விட்டதாக  கருத்து தெரிவிக்கின்றனர்

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios