இன்னும் 2 மணி நேரம் மட்டுமே...! ஆர் யூ ரெடி?
நாடு முழுவதும் உள்ள ஜியோ ஸ்டோர்களில் ரூ.15௦௦ - மதிப்புள்ள ஜியோ போனை பெறுவதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது , INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இலவசமாக என்றால் எவ்வளவு பெரிய விஷயம். அதற்கான முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் தொடங்க உள்ளது.
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 5௦௦ ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் போனை பெரும் போது மீதமுள்ள 1௦௦௦ ரூபாயை செலுத்த வேண்டும்.
பின்னர்,நீங்கள் மொபைல் வாங்கின தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
எப்படி முன்பதிவு செய்வது ?
ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து , ஜியோவின் இலவச போனை பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் சென்று , உங்கள் முன் பதிவை உறுதி செய்யலாம் அல்லது my jio app மூலமாகவும் முன்பதிவை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
ஜியோ.காம் என்ற இணையதளத்தின் மூலமாகவும் பெறலாம்.
www.jio.com.jiophone/ என்ற இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவை செய்துக்கொள்ளலாம்.
153 ரூபாய் - அளவில்லா கால்கள், மெசேஜிங் & டேட்டா
ஜியோவின் தன் தனா ஆபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும். அன்லிமிடட் கால்ஸ் சேவையை பெறலாம்.