மீண்டும் OTT சந்தாவுடன் ஜியோ சலுகைகள் அறிவிப்பு- ஆனா பட்ஜெட் பெருசு பாஸ்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகளுடன் ரூ. 1499 மதிப்பிலான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டும் இதேபோன்ற சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
சந்தாவுடன் சேர்த்து டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை மூன்று மாதங்கள் மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகின்றன. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இல்லாமல் 3 மாதங்களுக்கான சலுகை விலை ரூ.719 என்றும் தினமும் 2.5GB டேட்டா வழங்கும் ஒரு வருடத்திற்கான சந்தா ரூ.2999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சலுகை விவரங்கள்
தினமும் 2 GB டேட்டாவுடன் மூன்று மாதங்கள் (82 நாட்கள்) சலுகை விலை ரூ. 1499
தினமும் 3 GB டேட்டாவுடன் ஒரு வருடத்திற்கான சலுகை விலை ரூ. 4199
இரு சலுகைகளுடன்அன்லமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை பெற பயனர்கள் தொடர்ந்து ஏதேனும் சலுகையில் ரி-சார்ஜ் செய்ய வேண்டும். இவை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் அனைத்து செக்பாயிண்ட்களிலும் கிடைக்கிறது.