ஜியோவுக்கு ஆப்பு... ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..!
ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜியோ வருகையால் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதிகபட்சமாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50,000 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாகவும், விரைவில் இந்தியாவை விட்டு வெளியே உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின.
இது கடந்த 3-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு, வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3000 நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவித்தன. கட்டணமும் உயர்ந்து பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகை என்ற பெயரில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோவால் பாதிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், ஜியோவுக்கு போட்டியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.