எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ. 5 லட்சம் வரை மாணியம் - சூப்பர் திட்டம் அறிவிப்பு
புதிதாக எலெக்ட்ரிக் கார் வங்குவோருக்கஉ அதிகபட்சம் 6 ஆயிரம் யூரோக்கள் வரையிலான மாணியம் வழங்க இத்தாலி முடிவு செய்துள்ளது.
இத்தாலியில் எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு 6 ஆயிரம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 2 ஆயிரத்து 649 வரையிலான மாணியம் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கார் உற்பத்தி துறையை ஊக்குவிக்க ரோம் நகரில் மட்டும் 2030 வரை செலவிட 8.7 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் யூரோக்கள் மாணியம் என்பது குறைந்தபட்சம் 35 ஆயிரம் யூரோக்கள் மதிப்புள்ள புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் யூரோக்கள் பழைய கம்பஷன் என்ஜின் கார்களை ஸ்கிராப் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
45 ஆயிரம் யூரோக்கள் மதிப்புள்ள ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் போது 2500 யூரோக்கள் மாணியமாக வழங்கப்படுகிறது. இதில் பழைய கம்பஷன் என்ஜின் கொண்ட கார்களை ஸ்கிராப் செய்யும் போது 1250 யூரோக்கள் மாணியமாக வழங்கப்படும்.
எலெக்ட்ரிக் கார்களுக்கு மாணியம் வழங்குவதன் மூலம் இத்தாலியில் காற்று மாசை ஏற்படுத்தும் பெட்ரோல் கார்களின் விற்பனையை குறைப்பதோடு, புதிதாக எலெக்ட்ரிக் கார் வாங்க வாடிக்கையாளர்களை தூண்ட முடியும். இதனால் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கும். மேலும் காற்று மாசு அளவும் குறையும் என அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.