- Home
- டெக்னாலஜி
- அம்சங்கள் எல்லாம் தெறிக்குது!.. 6500mAh பேட்டரி, 50MP கேமரா.. விவோ X300 FE போனின் ரகசியங்கள்
அம்சங்கள் எல்லாம் தெறிக்குது!.. 6500mAh பேட்டரி, 50MP கேமரா.. விவோ X300 FE போனின் ரகசியங்கள்
விவோ தனது X சீரிஸில் விவோ X300 FE என்ற புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 8 Gen 5 பிராசஸர், 6500mAh பேட்டரி, 50MP பிரதான கேமரா போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது.

Vivo X300 FE
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் ஒரு புதிய பிரீமியம் மாடல் அறிமுகமாக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோ தனது X சீரியஸில் புதிய மாடலாக விவோ X300 FE என்ற ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் X300 மற்றும் X300 Pro மாடல்களுடன் இந்த போனும் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், சமீபத்தில் கீக்பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டது அறிமுகம் ஆகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. விவோ X300 FE ஸ்மார்ட்போன் 6.31 இன்ச் அளவிலான LPTO AMOLED ப்ளேவுடன் வரலாம் என்று கூறப்படுகிறது.
Vivo X300 FE specifications
இந்த திரை 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. மேலும் 5,000 நிட்ஸ் வரை பிரகாசம் அளிக்கக்கூடியதாக இருப்பதால் வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் திரையை தெளிவாக பார்க்க முடியும். IP68 மற்றும் IP69 பாதுகாப்பு தரத்துடன் வரும் என்பதால் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறனும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 பிராசஸர் பயன்படுத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதோடு 12ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைல் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் போன்ற செயல்களுக்கு மிகுந்த வேகத்தை வழங்குகிறது. பேட்டரி திறன் 6500mAh ஆக இருக்கும் என்றும், 90W வேக சார்ஜிங் வசதி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறுகிய நேரத்தில் போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
Vivo X300 FE camera specs
கேமரா அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (3x ஆப்டிக்கல் ஜூம்) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா ஆகியவை இடம்பெறலாம். செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vivo X300 FE price in India
இந்த போன் கூல் லிலாக், கிராஃபைட் பிளாக் மற்றும் மூன்லைட் ஒயிட் போன்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாதம் 2026 மே மாதம் முதல் பாதியில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. விலை ரூ.64,999 அளவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வராத நிலையில், சக்திவாய்ந்த அம்சங்களுடன் இந்த போன் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என தொழில்நுட்பம் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

