நிலவில் 3D போட்டோ எடுத்த பிரக்யான் ரோவர்! கெத்தா போஸ் கொடுக்கும் விக்ரம் லேண்டர்!

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் எடுத்த முப்பரிமாணப் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ISRO shares three dimensional images of Moon captured by Pragyan rover sgb

இந்தியாவின் வெற்றிகரமான சந்திரயான்-3 நிலவுப் பயணத்தில் பிரக்யான் ரோவர் எடுத்த முப்பரிமாணப் படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கி நிற்கும் விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவர் எடுத்த 3டி புகைப்படத்தில் உள்ளது.

ரோவரில் பொருத்தப்பட்ட நவ்கேம் என்ற கேமரா மூலம் இந்தப் படம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிறப்பான முப்பரிமாணத் தோற்றத்தில் இந்தப் படத்தை 3D கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும் என்றும் இஸ்ரோ ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ அறிவிப்பு

இதுகுறித்து இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், "அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணப் படங்களை உருவாக்குதல் ஆகும். இதன்படி, பிரக்யான் ரோவரில் உள்ள நவ் கேம் ஸ்டீரியோ இமேஜர் கேமரா மூலம் இடது மற்றும் வலது பக்கப் படங்களை பயன்படுத்தி அனாக்லிஃப் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

மேலும், "இந்த 3D படத்தில், இடது படம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, வலது படம் நீலம் மற்றும் பச்சை சேனல்களில் வைக்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்கிடையேயான வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் முப்பரிமாண தோற்றம் கிடைக்கிறது" என இஸ்ரோ விளக்கியுள்ளது.

நவ் கேம் (NavCam) எனப்படும் நேவிகேஷன் கேமரா பெங்களூருவில் உள்ள மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகம் (LEOS) மூலம் உருவாக்கப்பட்டது. இதன் தரவு செயலாக்கம் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? ஜி20 உச்சி மாநாட்டினால் அதிகரிக்கும் வாய்ப்புகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios