ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். கணினியில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு வெகு விரைவாக சரிசெய்யப்பட்டதை அடுத்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரி விண்கலத்தின் பகுதிகளான பணிக்குழு கலன் (Crew Module), பிரதான ராக்கெட், தப்புவிப்பு ராக்கெட் ஆகியவற்றின் சோதனை சிறப்பாக நடைபெற்றது. விண்ணில் 16.6 கி.மீ. தூரம் சென்றதும் பணிக்குழு கலன் மீண்டும் பாராஷூட் மூலம் தரையிறக்கப்பட்டது.

வங்கக் கடலில் இறங்கும் விண்கலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் கடற்பனை உதவியுடன் பணிக்குழு கலன் கடலில் இருந்து மீட்டு வரப்பட்டும்.

Watch: இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் TV D1 மாதிரி விண்கல சோதனை வெற்றி

Scroll to load tweet…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக ககன்யான் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட உள்ளது. இதில் 3 வீரர்களை ஏற்றி விண்ணுக்கு அனுப்பி, அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பும் வகையில் ககன்யான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தின் முக்கிய பரிசோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்று ஆளில்லா மாதிரி விண்கலம் ஒன்றை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு: 5 வினாடிக்கு முன் தானாகவே நின்றுபோன கவுன்ட்டவுன்

Scroll to load tweet…

காலை 8 மணிக்கு விண்கலம் ஏவப்படுவதற்கு முன் தெளிவற்ற வானிலை காரணமாக மேலும் அரைமணிநேரம் தள்ளிப்போனது. 8.30 மணி ஆன பின்பும் விண்கலத்தை விண்ணில் ஏவமுடியாத நிலை நீடித்ததால் கவுன்ட்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது. பின் 8.45 மணி அளவில் மீண்டும் 5 நிமிட கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது. இந்த முறை விண்ணில் பாய்வதற்கு 5 வினாடிகள் முன்பு கவுன்ட்டவுன் தானாகவே நின்றுவிட்டது.

இதனால், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைக்கப்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். எஞ்சின் செயல்பாடு திட்டமிட்டபடி நடக்காததால் சோதனை நிறுத்தப்பட்டுள்ளத என்ற அவர், எதனால் இவ்வாறு நடந்தது என்பதை ஆய்வு செய்து விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைந்து பிரச்சினையை சரிசெய்ததால், மாதிரி விண்கலம் காலை 10 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

ககன்யான் திட்ட பரிசோதனை தாமதம்: தெளிவற்ற வானிலை காரணமாக அரைமணி நேரம் ஒத்திவைப்பு