ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டை குறிவைக்கும் ஐகூ - விரைவில் புது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!
ஐகூ நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புது 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஐகூ 9 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து Z6 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஐகூ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ஐகூ Z6 5ஜி ஸ்மார்ட்போன் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்படும் என ஐகூ உறுதிப்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்திய சந்தையில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக ஐகூ Z6 இருக்கும் என ஐகூ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 18 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஐகூ Z6 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ U5 மாடலாக இருக்கும் என தெரிகிறது.
ஐகூ Z6 (U5) அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசஸர்
- அட்ரினோ 619L GPU
- 4GB / 6GB / 8GB LPDDR4x ரேம்
- 128GB (UFS 2.1) மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/1.8
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் புதிய ஐகூ Z6 ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும். மேலும் இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. வரும் நாட்களில் புதிய ஐகூ Z6 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.