iQOO Z10 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 11ல் அறிமுகமாகிறது. 7,300mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 7s Gen 3 செயலி மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை 25,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.
iQOO நிறுவனம், iQOO Neo 10R ஸ்மார்ட்போனை தொடர்ந்து, iQOO Z10 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை ஏப்ரல் 11ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய 7,300mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. அறிமுகத்திற்கு முன், சில முக்கிய சிறப்பம்சங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போனின் எதிர்பார்க்கப்படும் விலை 25,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
