Asianet News TamilAsianet News Tamil

iQoo Neo 9 சீரிஸ்.. டிசம்பரில் லான்ச்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல் - ஸ்பெக் மற்றும் விலை விவரம் இதோ!

iQoo Neo 9 Series : பிரபல Vivo நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் செல் போன் நிறுவனம் தான் iQoo, கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

iQoo Neo 9 Launch confirmed in December full specifications and price ans
Author
First Published Nov 30, 2023, 10:38 AM IST

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் iQoo Neo போனின் 9 சீரிஸ், சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட iQoo Neo 8 போனின் வெற்றி வரிசையில் இதுவும் சேரும் என்று கூறப்படுகிறது. இந்தத் சீரிஸ் அடிப்படை, iQoo Neo 8 மற்றும் iQoo Neo 8 Pro உடன் தொடங்கப்பட்டது. 

வரவிருக்கும் iQoo Neo 9 சீரிஸ், எதிர்வரும் 2024ம் ஆண்டில் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனம் iQoo Neo 9 சீரிஸ் வெளியீட்டு காலவரிசையை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், உயர்நிலை iQoo Neo 9 Pro ஒரு சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

Oneplus 12.. இந்தியாவிற்கு அதிவிரைவில் வருது.. அதற்கு முன் நடைபெறும் கான்டஸ்ட் - வென்றால் என்ன பரிசு தெரியுமா?

Weiboவில் வெளியான ஒரு பதிவில், iQoo நியோ 9 சீரிஸ் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என்பதை iQoo உறுதிப்படுத்தியது. iQoo Neo 9 மாடல்களில் ஒன்று, சிவப்பு மற்றும் வெள்ளை என்று இரு நிறங்கள் கொண்டு ஒரு டீஸர் போல வெளியிடப்பட்டுள்ளது. ஃபோன் மேல், விளிம்பில் ஐஆர் பிளாஸ்டர் மற்றும் இடது விளிம்பில் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் பட்டன் உள்ளது.

iQoo Neo 9 ஸ்பெக் 

இந்த புதிய iQoo Neo 9 ஆனது Snapdragon 8 Gen 2 SoC உடன் வரும் என்றும், 16GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மறுபுறம், iQoo Neo 9 Pro ஆனது, 12GB RAM மற்றும் 256GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 9300 சிப்செட்டைப் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான FunTouchOS 14 அல்லது OriginOS 4 உடன் ஒவ்வொரு பிராந்தியத்தின் அடிப்படையில் அது மாறுபடும் என்று கூறப்படுகிறது.

சைலென்ட்டா ரிலீஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A15 ஸ்மார்ட்போன்! அப்படி என்ன சீக்ரெட் இருக்கு?

iQoo Neo 8 சீரிஸ் மாடல்களுக்கு சுமார் 29.300ல் இருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது, ஆகவே வரவிருக்கும் இந்த iQoo Neo 9 சீரிஸ் அதை விட சற்று கூடுதல் விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios