"காஸ் மூலம் இயங்கும் " ஹோண்டா ஆக்டிவா"....!! இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் இருசக்கர வாகனம் ...!!!
நாட்டில் முதல் முறையாக ஹோண்டா ஆக்டிவா CNG ( COMPRESSED NATURAL GAS ) . பிரபல ஹோண்டா நிறுவனத்தின் , இருசக்கர வாகனமான “ ஹோண்டா ஆக்டிவா” தற்போது காஸ் மூலம் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த காஸ் ஸ்கூட்டர் , சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி 50 PIZZA டெலிவரி பாய்ஸ் , இந்த வண்டியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த வண்டி சோதனை அடிப்படையில் வெற்றி அடைந்துள்ளது.
இந்த CNG KIT, புனேவில் தயாரிக்கப்பட்டுள்ளது..இந்த காஸ் வாகனம் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ( APPROVED BY ARAI ( automotive research authority of india )
இந்த ஆக்டிவாவின் விலை 75,000 ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த CNG KIT இரண்டு கிலோ எடை பிடிக்க கூடியது . அதன்படி , ஒரு கிலோ காஸ் மூலம், மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும், அதன்படி, இரண்டு கிலோ காஸ் பயன்படுத்தி, சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஸ்கூட்டரில் காஸ் மட்டுமின்றி, பெட்ரோல் மூலமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, நமக்கு ஏற்றாற்போல், பெட்ரோல் அல்லது காஸ் மூலம் , இந்த ஹோண்டா ஆக்டிவாவை இயக்க முடியும் .......
தற்போதைய சூழலில் , வாகனத்தில் இருந்து வரும் புகையால் காற்று மாசுபடுவதை தடுக்க , இந்த வாகனம் கை கொடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
தற்போது இந்த வாகனம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .......