Instagram Update: இன்ஸ்டாவில் அற்புதமான 3 புதிய அப்டேட்கள்!

இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் மூன்று புதிய அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை என்ன, எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்குக் காணலாம்.

Instagram adds Notes, Group Profiles, Candid Stories and other sharing features check details here

சமூக வலைதளங்களில் முன்னனி இடத்தில் இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதில் தற்போது நோட்ஸ், குரூப் ப்ரொபைல்ஸ், கொலாபிரேட்டிவ் கலெக்ஷன்ஸ், கேண்டிட் ஸ்டோரிஸ் என மூன்று அப்டேட்டுகள் வந்துள்ளன. 
 
நோட்ஸ் (Notes)

நண்பர்களுடன் குறிப்புகளைப் பகிரவும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் Notes என்ற புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகபட்ச நீளம் 60 கேரக்டர்ஸ் வரையிலான எழுத்து, ஈமோஜிகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 நீங்கள் ஒருவருக்கு ஒரு குறிப்பை அனுப்ப விரும்பினால், இன்பாக்ஸின் மேல் பகுதியில் பார்க்கவும். அதில், நீங்கள் பின்தொடரும் நபர்களை அல்லது உங்கள் 'நெருங்கிய நண்பர்கள்' பட்டியலில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கவும், அந்தக் நோட்ஸ் அவர்களின் இன்பாக்ஸின் மேல், ஸ்டோரி போல் 24 மணிநேரங்களுக்கு தோன்றும். குறிப்புக்கான பதில் உங்கள் மெசேஜ்களில்.

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்! வந்துவிட்டது AI chatbot, ChatGPT!

குரூப் ப்ரொபைல்ஸ் (Group Profiles):

குழு சுயவிவரம் என்பது ஒரு புதிய அம்சமாகும், இது Instagram இல் உங்கள் நண்பர்களுடன் பிரத்யேகமாக பகிரப்பட்ட சுயவிவரத்தில் போஸ்ட்கள், ஸ்டோரிகளைப் பகிர உதவுகிறது. குழு சுயவிவரத்துடன் இடுகையைப் பகிர்ந்தால், குழுவில் பங்கேற்பாளர்கள் மட்டுமே நீங்கள் பகிர்ந்ததைப் பார்க்க முடியும். மேலும், நீங்கள் பகிரும் இடுகைகள் உங்கள் சுயவிவரத்தில் காணப்படாது. இந்த புதிய அம்சத்தைப் பெறுவதற்கு, பிளஸ் ஐகானைத் தட்டவும், 'குரூப் சுயவிவரங்கள்' என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள்.

Collaborative Collections

இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நீங்கள் சேமித்த இடுகைகளை ஒரு குழு அல்லது தனிப்பட்ட மெசேஜ்கள் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. நீங்கள் ஒரு இடுகையை ‘Collaborative Collections’ சேமிக்க விரும்பினால், அதை நேரடியாக முகப்புப் பக்கத்தில் இருந்து சேமிக்கவும் அல்லது மெசேஜ் வழியாக உங்கள் நண்பருக்கு அனுப்பி அங்கிருந்து சேமிக்கவும்.

கேண்டிட் கதைகளுக்கான தினசரி அறிவிப்புகளை நீங்கள் விரும்பவில்லை என்றால், ஆப்ஸ் அமைப்புகளில் இருந்து அவற்றை முடக்கலாம். மேலும், ஃபேஸ்புக் கதைகளுக்காக மெட்டா இதே போன்ற அம்சத்தை உருவாக்குவது போல் தெரிகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios