Asianet News TamilAsianet News Tamil

லோ பட்ஜெட் செக்மென்ட்டில் ஒரு சூப்பர் ஸ்மார்ட் போன்.. வெளியாகிறது Infinix Hot 50 5G - முழு விவரம்!

Infinix Hot 50 5G : பிரபல Infinix நிறுவனம் தனது புத்தம்புதிய லோ பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஒன்றை இந்திய சந்தையில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அறிமுகம் செய்கின்றது.

Infinix Hot 50 5g to launch in india budget smart phone ans
Author
First Published Sep 3, 2024, 6:41 PM IST | Last Updated Sep 3, 2024, 6:41 PM IST

Infinix Hot 50 5G ஆனது நாளை மறுநாள் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது அந்த நிறுவனம். அதன் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களை infinix சமீபத்தில் வெளியிட்டதும் அனைவரும் அறிந்ததே. இப்போது, ​​வரவிருக்கும் இந்த புதிய Infinix Hot 50 5G ஸ்மார்ட்போனுடன் Infinix Hot 50 4G, Hot 50 Pro, Hot 50 Pro+ மற்றும் Hot 50i மாடல்களும் இணைந்து அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Infinix Hot 50 5G அதன் பிரிவில் வெளியாகும் மிகவும் மெலிதான 5G ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் உண்மை விலை இன்னும் தெரியவில்லை என்றாலும், "Flipkartல் ரூ. 10,000 என்ற விலை பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் 5G ஸ்மார்ட்போன்" லிஸ்டில் இது உள்ளது. நாளை மறுநாள் முதல் பிளிப்கார்ட் தலத்தில் மட்டுமே இது விற்பனைக்கு வரவுள்ளது. சில்லறை வணிகர்களுக்கு இந்த போன் விற்பனைக்கு அளிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

கூகுள் பிளே ஸ்டோரில் சின்ன அப்டேட்! ஆனா, ஆண்ட்ராய்டில் எல்லாமே மாறப்போகுது!!

Infinix Hot 50 5G ஸ்பெக்ஸ் 

Hot 50 5G ஆனது 7.8mm தடிமன் கொண்ட ஸ்லிம் போனாக இருக்கும் என்று Infinix முன்பு தெரிவித்திருந்தது. நீலம், பச்சை மற்றும் வெளிர் சாம்பல் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஃபோன் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட்டில் உள்ள விளம்பரப் படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கைப்பேசியானது Vertical Pill வடிவ பின்பக்க கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP54 ரேட்டிங் இந்த போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் Infinix Hot 50 5G, MediaTek Dimensity 6300 SoC மூலம் இயக்கப்படும், 8GB வரை RAM மற்றும் 128GB UFS 2.2 உள் சேமிப்பகத்துடன் இது வருகின்றது. திரையில் 'வெட் டச்' அம்சம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சிறிய அளவில் தண்ணீர் துளிகளால் டிஸ்பிலே ஈரமாக இருந்தாலும், திரையுடன் தொடர்புகொள்ள பயனர்களுக்கு அது உதவுகிறது.

ஆஹா ஆஃபர்! ஆப்பிள் ஐபோன் மீது பெரும் தள்ளுபடி - எவ்ளோ தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios