Asianet News TamilAsianet News Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் சின்ன அப்டேட்! ஆனா, ஆண்ட்ராய்டில் எல்லாமே மாறப்போகுது!!

புதிய அம்சம் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புதிய ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும் செயல்முறையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Google Play Store to introduce auto-open feature for Apps: All you need to know sgb
Author
First Published Sep 3, 2024, 11:07 AM IST | Last Updated Sep 3, 2024, 11:35 AM IST

கூகுள் ப்ளே ஸ்டோர், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை இன்ஸ்டால் செய்த உடனே தானாகவே திறக்கும் புதிய ‘ஆட்டோ-ஓபன்’ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தப் அப்டேட் ஒரு அப்ளிகேஷனை புதிதாக இன்ஸ்டால் செய்த பிறகு அதனை தேடிக் கண்டுபிடித்து திறக்க வேண்டிய தேவையை நீக்குகிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்த அப்டேட்டைக் கொண்டுவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஜூன் மாதம் கூகுள் ப்ளே ஸ்டோர் அப்டேட்டில் ஆட்டோ-ஓபன் அம்சம் சோதனைக் கட்டத்தில் இருப்பது தெரிந்தது. இந்த வசதி இன்னும் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கவில்லை.

15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! மிரட்டும் வீர மஹாசாம்ராட்!!

ஆட்டோ-ஓபன் அம்சம் எப்படி வேலை செய்யும்?

ஆண்ட்ராய்டு ஆணையத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, ஸ்மார்ட்போனில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ஒரு செயலியை நிறுவியவுடன், 5-வினாடி கவுண்டவுன் டைமருக்குப் பின் செயலி திறக்கும். அதற்கு முன் ஆப் டிராயரில் நோட்டிஃபிகேஷன் தோன்றும்.

ப்ளே ஸ்டோரில் உள்ள "Install" பட்டனுக்குக் கீழ் இன்ஸ்டால் செய்த பிறகு தானாகத் திறக்கும் ஆப்ஷன் மூலம் இந்தச் வசதியை செயல்படுத்தலாம்.

இந்தப் புதிய அம்சம் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புதிய ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும் செயல்முறையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ரயிலில் சக்கரத்தில் நசுங்கி 2 சிறுவர்கள் சாவு! மொபைல் கேம் மோகத்தால் நேர்ந்த விபரீதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios