Hero Vida1 150கி.மீ மைலேஜ் !‘ஹீரோ விடா வி1’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று அறிமுகம்:விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

ஹூரோ மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1(vida v1)  இந்தியச் சந்தையில் முறைப்படி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. 

India is set to launch the Hero Vida electric scooter vida v1 today.

ஹூரோ மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1(vida v1)  இந்தியச் சந்தையில் முறைப்படி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஏற்கெனவே சந்தையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலாவின் எஸ்1,எஸ்1 ப்ரோ,  பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் நிறுவனத்தின் ஐகியூப், ஏதர் 450எக்ஸ் ஆகியவற்றுக்கு ஹீரோமோட்டார்ஸின் விடா வி1 சரியான போட்டியாக இருக்கும்.

வயதிலேயே திடீர் மரணம்: WWE சூப்பர்ஸ்டார் மல்யுத்த வீராங்கனை சாரா லீ காலமானார்

இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஹீரோ மோட்டார்ஸ்கார்ப்பரேஷன் சந்தையில் முன்னணியில் இருந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இன்னும் கால்பதிக்கவில்லை. விடா-ஸ்கூட்டர் வருகை நிச்சயம் ஹீரோ நிறுவனத்துக்கு மைல்கல்லாக அமையும்.

இதற்கு முன் தைவானைச் சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி தயாரிப்பில் ஹீரோ நிறுவனம் ஈடுபட்டது, அந்த பேட்டரியுடன் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகலாம்.

12 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிபோகிறது: 15% ஆட்குறைப்பு செய்ய ஃபேஸ்புக் முடிவு

அதுமட்டுமல்லாமல் பேட்டரியை எளிதாக மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பத்தையும் ஹீரோவின் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. இது தவிர டெலஸ்கோபிக் போர்க்ஸ், முன்பக்கம் 12 இன்ஞ் வீல், பெல்ட் டிரைவ், வைபை, ப்ளூடூத் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்க்ரீன், ரைடிங் மோட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன. 

ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால், 150 கி.மீவரை செல்லும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியான தகவல் இன்று அறிமுகத்துக்குப்பின் தெரியவரும்

செல்லப் பிராணிகளையும் விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லலாம்! அகாசா ஏர் நிறுவனம் அனுமதி

இந்திய சந்தையில்  அறிமுகமாகியபின்புதான், விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது. மற்றவகையில் புக்கிங் முடிந்தபின் எப்போது வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் டெலவரி செய்யப்படும் எனும் விவரமும் தெரியவில்லை.

ஹீரோ விடா வி1 ஸ்கூட்டர் விலை எக்ஸ் ஷோரூமில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிகிறது. 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios