akasa air pets:செல்லப் பிராணிகளையும் விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லலாம்! அகாசா ஏர் நிறுவனம் அனுமதி
இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட அகாசா ஏர் விமானநிறுவனம், பயணிகள் தங்கள் செல்லப் பிரணிகளையும் விமானத்தில் உடன் அழைத்துவர அனுமதிக்க உள்ளது.
இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட அகாசா ஏர் விமானநிறுவனம், பயணிகள் தங்கள் செல்லப் பிரணிகளையும் விமானத்தில் உடன் அழைத்துவர அனுமதிக்க உள்ளது.
வரும் நவம்பர் 1ம் தேதி முதல் விமானத்தில் செல்லும் பயணிகள் தங்களுடன் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லலாம். இதற்கான முன்பதிவு வரும் 15ம் தேதி முதல் தொடங்கும் என ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்
ஒரு பயணிக்கு ஒரு செல்லப்பிராணி வீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். செல்லப் பிராணி 7கிலோ வரை இருந்தால் உடன் வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எடை இருந்தால் பயணிகள் உடமைகள் இருக்கும் அறையில், கூண்டில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும்.
ஆகாசா ஏர் நிறுவனத்தின் சந்தைப்பிரிவு தலைவரும், துணை நிறுவனருமான பெல்சன் கோடிங்ஹோ கூறுகையில் “ முதல்கட்டமாக வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை மட்டும் விமானத்தில் பயணிகள் அழைத்து வர அனுமதிக்கப்படும். அதன்பின் படிப்படியாக எங்கள் கொள்கையை உயர்த்தி, மேம்படுத்தப்படும்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !
செல்லப்பிராணிகள் 7 கிலோ முதல் 32 கிலோ எடை வரை இருந்தால், கூண்டில் வைத்து பயணிகள் உடமைகள் கொண்டு செல்லப்படும் பகுதியில் வைத்து கொண்டுவரப்படும். செல்லப்பிரணிகளை சிறப்பாகக் கையாள்வதற்கு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்
விமானத்தில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லும்போது விதிக்கப்படும் கட்டணம் குறித்து ஆகாசா நிறுவனம் ஏதும் தெரிவிக்கவில்லை. பயணிகளுக்கு உதவ வேண்டும், அவர்களின் பயண அனுபவம் சிறப்பாக இருக்கவே வசதிகளைச் செய்துள்ளோம் என்று ஆகாசா ஏர் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ளநிலையில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா ஆகிய விமானநிறுவனங்கள் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்குகின்றன. ஆனால், ஏர் ஏசியா, இன்டிகோ நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. பார்வைமாற்றுத்திறனாளிக்கு உதவும் விலங்கு தவிர வேறு ஏதும அனுமதிப்பதில்லை.
குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்
ஆகாசா ஏர் நிறுவனத்தின் வர்த்தக அதிகாரி பிரவீண் ஐயர் கூறுகையில்” 7ம் தேதி முதல் டெல்லி-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் வாரத்துக்கு 300 விமானங்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்குள் மும்பை, அகமதாபாத், கொச்சி, சென்னை, டெல்லி, அகர்தலா, கெளகாத்தி ஆகிய நகரங்களுக்கு விமானச் சேவையை இணைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது ஆகாசா நிறுவனத்திடம் 6 விமானங்கள் மட்டுமே உள்ளன.
இருப்பினும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு விமானம் சேர்க்கப்படும் நிதியாண்டி முடிவுக்குள் 18 விமானங்களாக உயரும். 5ஆண்டுகளில் 72 விமானங்களாக உயரும்” எனத் தெரிவித்தார்