ரிலையன்ஸ் ஜியோ  கடந்த 6 மாத  காலமாக இலவச வாய்ஸ் கால்ஸ், டேட்டா என  பல  அருமையான  சலுகைகளை வாரி வழங்கியது,இதன்  காரணமாக  ரிலையன்ஸ் ஜியோவிற்கு, இதுவரை 1௦ கோடி மேல்  வாடிக்கையாளர்கள்  உள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 31 ஆம்  தேதியுடன் அதாவது  நாளையுடன் ஜியோ வழங்கி  வந்த இலவச சேவைகளுக்கு  முற்றுபுள்ளி  வைக்க உள்ளது.இந்நிலையில் ஜியோ வை தொடர்ந்து  பயன்படுத்த  வேண்டுமென்றால், 99 ரூபாய்க்கு  ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவித்து  இருந்தது. இந்த அறிவிப்புக்குபின் தற்போது, 5  கோடி பேர்  வரை ரூ.99 ரீசார்ஜ் செய்தும், அதற்கு மேலான டேட்டா கட்டணத்தையும்  ரீசார்ஜ் செய்துள்ளதாக  ஜியோ தெரிவித்துள்ளது.

மீதமுள்ளவர்கள் ரீசார்ஜ்  செய்யலாமா  வேண்டாமா  என்பதில்  குழப்பம் அடைந்து  உள்ளனர். மேலும் சில  சலுகைகள்  அறிவிக்குமா  ஜியோ  என்ற எதிர்பார்ப்பிலும்  சிலர் உள்ளனர்.,

ஆனால், நாளைக்குள் 99 ரூபாய்க்கு நாளைக்குள்  ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், இலவச  வாய்ஸ்  கால்ஸ் செய்யும்  வசதியுடைய jio  பிரைம்  திட்டத்தை பயன்படுத்த  முடியாது.

ஒரு  வேளை ரீசார்ஜ்  செய்ய வில்லை என்றால், அடுத்த 3 மாதத்தில்  தானாகவே  இணைப்பு  துண்டிக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளது, மேலும் 99 ரூபாய்க்கு  ரீசார்ஜ்  செய்துவிட்டால் போதுமா  ஒரு  வருடத்திற்கு  டேட்டா  இல்லாமல்  இலவச  வாய்ஸ்  கால்ஸ் சேவையை பயன்படுத்த முடியுமா  என்றால் ? அதுவும்  முடியாது ,  குறைந்த  கட்டண  சலுகையை பெறுவதற்காவது ரீசார்ஜ் செய்தால் தான், தொடர்ந்து  பயன் படுத்த முடியும் . இல்லையெனில் 9௦ நாட்களுக்குள்  ஜியோ  இணைப்பு துண்டிக்கப்படும்  என  தெரிவிக்கப் பட்டுள்ளது.