எலெக்ட்ரிக் வடிவில் ரி-எண்ட்ரி.. விரைவில் இந்தியா வரும் ஹெச்.எம். காண்டெசா EV..!

இந்திய சந்தையில் புதிய அம்சாடர் மாடலை தொடர்ந்து ஹெச்.எம். காண்டெசா வெளியீடும் நடைபெறும் என கூறப்படுகிறது.

 

Iconic Contessa car may be revived as an EV as Hindustan Motors registers brand name in India

இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் காண்டெசா பிராண்டை இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் காண்டெசா பிராண்டு அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1980-க்களில் இந்திய சந்தையில் அதிக பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக காண்டெசா விளங்கியது குறிப்பிடத்தக்கது. 

எலெக்ட்ரிக் வாகன துறையில் சமீபத்தில் களமிறங்கிய இந்துஸ்தான் மோட்டார்ஸ், காண்டெசா பிராண்டை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம். ஹெச்.எம். காண்டெசா முற்றிலும் புது பவர்டிரெயின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும் என்றும், இதன் பாடி மற்றும் இண்டீரியர்களும் புதிய தோற்றம் பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹெச்.எம். காண்டெசா ரி-எண்ட்ரி:

இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் காண்டெசா பிராண்டு 1980-க்களில் சக்திவாய்ந்த கார் என்ற பெருமையை பெற்று இருந்தது. இந்திய சந்தையில் ஹெச்.எம். காண்டெசா பெயரை பயன்படுத்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் காப்புரிமை கோரி இருக்கிறது. புதிய காண்டெசா மாடலை உருவாக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் பியுஜியோட் உடன் கூட்டணி அமைக்கிறது.

Iconic Contessa car may be revived as an EV as Hindustan Motors registers brand name in India

புதிய கார் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என இருவித வேரியண்ட்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய காண்டெசா மாடலின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், இன்றைய பாதுகாப்பு வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையிலான உருவம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் புதிய ஹெச்.எம். காண்டெசா ரெட்ரோ-மாடன் ஸ்டைல் கொண்டு இருக்கும் என தெரிகிறது.

புதிய அம்பாசடர்:

மேம்பட்ட காண்டெசா மாடலில் அசத்தலான இண்டீரியர்கள் வழங்கப்படலாம். இதன் எலெக்ட்ரிக்கல் அம்சங்கள் புதிய ஹார்டுவேர் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏராளமான கேஜெட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும்  என எதிர்பார்க்கலாம். 

புதிய அம்சாடர் மாடலை தொடர்ந்து ஹெச்.எம். காண்டெசா வெளியீடும் நடைபெறும் என கூறப்படுகிறது. புதிய ஹெச்.எம். அம்பாசடர் மாடல் 2023 அல்லது 2024 வாக்கில்  அறிமுகம் செய்யப்படலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios