குழந்தைங்க கிட்ட ஸ்மார்ட்போன் கொடுக்கிறீங்களா? அப்போ உஷார்..!

உங்கள் குழந்தைகள் தேவையில்லாத செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான அம்சம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது என்ன அம்சம், எப்படி ஆன் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
 

How to setup parental controls family link app on an Android smartphone

ஸ்மார்ட்போனில் 18 வயதிற்கு மேற்பட்ட விஷயங்களால் குழந்தைகளின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் பல இருக்கலாம். அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு எளிதான வழி Google Play Store தளத்தில் உள்ளது. இந்த அம்சம் parental control என்பதன் கீழ் வருகிறது.

இதில் வயது அடிப்படையில் குழந்தைகள் அணுகக்கூடிய செயலிகள், கேம்கள் மற்றும் திரைப்படங்களை நீங்கள் தீர்மானிக்கலாம். இதன் மூலம் இனி தயங்காமல் உங்கள் ஸ்மார்ட்போனை குழந்தைகளிடம் கொடுக்கலாம்.

Google Play Store இல் parental control ஆப்ஷனை மாற்ற, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

*Google Play Store ஐத் திறந்து, மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டி, அமைப்புகளைக் கிளிக் செய்து, "குடும்பத்திற்கு" செல்லவும். இங்கே, பெற்றோர் கட்டுப்பாடுகளைக் (parental control) காணலாம்.

*பெற்றோர் கட்டுப்பாடுகளை கிளிக் செய்யவும் பின்னர் அதை மாற்றவும். முதன்முறையாக இதைச் செய்யும்போது பாஸ்வேர்டு அமைக்கும்படி கேட்கப்படுவீர்கள். பெற்றோர் கட்டுப்பாடு அமைப்புகளில் யாராவது மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கும்போதோ அல்லது அதை முடக்கும்போதோ மீண்டும் இந்த பாஸ்வேர்டு தேவைப்படும்

*பாஸ்வேர்டு அமைக்கப்பட்டதும், ப்ளே ஸ்டோரில் உங்கள் குழந்தைக்கு எந்த வகையான விஷயங்கள் காட்ட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, “7+ க்கு மதிப்பிடப்பட்டது” என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் குழந்தை 12+, 16+ மற்றும் 18+ வயதிற்குட்பட்ட செயலிகளை அணுகவோ பதிவிறக்கவோ முடியாது.

ஆனால் parental control என்பது அடிப்படை விஷயங்களை மட்டுமே கட்டுப்படுத்தும். உங்கள் பிள்ளையை 18+ இணையதளங்களுக்குச் செல்லாமல் பாதுகாக்க விரும்பினால் என்ன செய்யலாம்? அங்குதான் கூகுளின் Family Link ஆப்ஸ் உள்ளது. 

இந்த செயலி மூலம் உங்கள் பிள்ளைகள் எவ்வளவு நேரம் பிரவுசரில் இருக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் என்ன பிரவுசிங் செய்கிறார்கள், எந்தெந்த இணையதளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கலாம். மேலும், தேவையில்லாத இணையதளங்களை முடக்கலாம். 

WhatsApp செயலியில் விரைவில் சிறிய மாற்றம்!

ஸ்மார்ட்போனில் Family Linkஐ அமைக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

  • *உங்கள் குழந்தையின் மொபைலிலும் உங்கள் மொபைலிலும் Family Linkஐப் பதிவிறக்கவும்.
  • *ஆப்ஸைத் திறந்தவுடன், உங்களுக்கான கணக்கு மற்றும் உங்கள் குழந்தைக்கான கணக்கை இணைக்கும்படி கேட்கப்படும். உங்கள் பிள்ளைக்கு Google கணக்கு இல்லையென்றால், அவருக்காக ஒன்றை உருவாக்கிடுங்கள்.
  • *பின்பு இணைக்கும் செயல்முறை முடிந்ததும், குழந்தைகள் அவர்களது ஸ்மார்ட்போனில் அவர்களுக்காக நீங்கள் உருவாக்கிய கணக்கு மூலம் உள்நுழையலாம்,
  • அவர்கள் உள்நுழைந்த பிறகு, உங்கள் குழந்தைக்கு Family Link செயலியைப்  பயன்படுத்தி ஃபோன் விதிகளை அமைக்கலாம். Family Link அமைக்கப்பட்டதும், மேற்கண்டவாறு 18+ விஷயங்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கலாம்.
     
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios