WhatsApp, Instagram செயலி மூலம் புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர்கள் மூலம் புத்தாண்டு 2023 வாழ்த்துகளை சிறப்பாக அனுப்புவது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.
2023 புத்தாண்டு தொடங்க உள்ளது. இந்த புதிய ஆண்டை நாம் அனைவரும் நமது அன்பானவர்களுடன் இணைந்து தொடங்க முடியாது என்றாலும், தொழில்நுட்பத்தால் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்போதும் இணைந்திருக்க முடியும். குறிப்பாக, நமக்கு வழக்கமான Instagram, WhatsApp போன்ற சமூக வலைதளங்கள், மெசேஜ் செயலிகள் மூலம் இப்போது நீங்கள் எங்கிருந்தாலும் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பலாம்.
இருப்பினும், உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை அட்டகாசமான ஸ்டிக்கர்களுடன் இன்னும் புதுமையான முறையில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வகையில், வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம்களில் ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி என்பது இங்கே காணலாம்.
வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை அனுப்ப, முதலில் ஸ்டிக்கர் பேக்குகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இதைச் செய்ய, ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று ஸ்டிக்கர் பேக்குகளை பதிவிறக்கம் செய்யலாம்.
புத்தாண்டு ஸ்டிக்கர்களைத் தேடினால் போதும், நிறைய கிடைக்கும். ஸ்டிக்கர்களை இன்ஸ்டால் செய்ததும், அதைத் திறக்கவும், ஸ்டிக்கர் பேக்குகள் எனப்படும் ஸ்டிக்கர்களில் பல குழுக்களை நீங்கள் பார்க்கலாம். அந்த ஸ்டிக்கர் பேக்குகள் ஒவ்வொன்றும் நீங்களாகவே இன்ஸ்டால் செய்யலாம். அதில் நீங்கள் விரும்பும் ஒன்றை உங்கள் மொபைலில் வைத்துக் கொள்ளவும், இப்போது உங்கள் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு ஸ்டிக்கர் பேக்கையும் சேர்க்க வேண்டும்.
இதற்கு நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பிரவில் '+' என்ற குறியீடை க்ளிக் செய்ய வேண்டும். பின்பு, அதை கிளிக் செய்து ஸ்டிக்கர் பேக்கை சேர்க்கவும். இவ்வாறு நீங்கள் பல ஸ்டிக்கர் பேக்குகளையும் நிறுவலாம்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறீர்களா? போலி OTP மூலம் அதிகரிக்கும் நூதன மோசடி
உங்கள் ஸ்டிக்கர் பேக்குகள் சேர்க்கப்பட்டவுடன், அவற்றை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அல்லது எந்த குரூப்க்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பலாம். இதைச் செய்ய, சேட் விண்டோவில், ஈமோஜியை கிளிக் செய்யவும்.
அதில், ஈமோஜியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஸ்டிக்கர்கள் பகுதிக்குச் செல்லவும், பொதுவாக வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும், இங்கே, நீங்கள் நிறுவிய தனிப்பட்ட ஸ்டிக்கர் பேக்குகள் காணலாம். உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை க்ளிக் செய்து இப்போது அனுப்பவும்.