Asianet News TamilAsianet News Tamil

உங்க போன்ல சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க

வாங்கிய சிறிது நாளில் உங்கள் போனின் வால்யூம் கம்மியா இருக்கா ? கவலை வேண்டாம்.  இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணி பாருங்கள் பிறகு உங்கள் போனில் சவுண்ட் வேற லெவல்ல இருக்கும்.
 

How to increase phone speaker volume without any third party app
Author
First Published Oct 31, 2022, 9:48 PM IST

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள வால்யூம் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு ஆப்பின்  உதவியும் தேவையில்லை. இந்த 2 டிப்ஸை ஃபாலோ பண்ணாலே போதும்.

1. இணையதளம் மூலம் தீர்வு :

உங்கள் மொபைலின் கூகுள் குரோமில் ஃபிக்ஸ் மை ஸ்பீக்கர் ( Fix my speaker ) என டைப் செய்யவும். அதில் https://fixmyspeakers.com/ என்ற லிங்கை க்ளிக் செய்யவும். உங்கள் போனை ஃபுல் வால்யூமில் வைத்துக் கொள்ளுங்கள்.  பிறகு நீர்த்துளி போன்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.

இதன் பிறகு உங்கள் மொபைலின் வால்யூமை மெதுவாக குறைக்கவும். பின் மெதுவாக அதிகரிக்கவும். இந்த ஃபிக்ஸ் மை ஸ்பீக்கரிலிருந்து வரக்கூடிய ஒலியானது ஒருவிதமான வைப்ரேஷனை ஏற்படுத்தும். பிறகு உங்கள் மொபைலை மெதுவாக தட்டுங்கள். இதன் மூலம் உங்கள் ஸ்பீக்கரில் உள்ள அனைத்து தூசிகளும் வெளியேறி உங்கள் போனின் வால்யூம் பிரச்சனை சுலபமாக தீர்ந்துவிடும்.

2. செட்டிங்ஸ் வழியாக தீர்வு :

உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்லவும். அதில் சவுண்ட் அண்ட் வைப்ரேஷன் ( Sound and Vibration ) என்பதை தேர்வு செய்யவும். பிறகு சவுண்ட் குவாலிட்டி அண்ட் எஃபக்ட் ( Sound Quality and effect ) என்பதை க்ளிக் செய்யவும். இதில் இரண்டு அம்சங்கள் இருக்கும். சிலருக்கு அது செயலில் இருக்கும் சிலருக்கு செயல்படாமல் இருக்கும்.

Youtube Tips: இப்படி கூட யூடியூப்பை பயன்படுத்தலாம் செய்யலாம்!

இதனை செயல்படுத்த உங்கள் ஸ்மார்ட் போனுடன் ஹெட் செட்டை கணக்ட் செய்யவும். பிறகு அதில் டால்பி அட்மோஸ் ( Dolby Atmos ) என்பதை ஆன் செய்யவும். நீங்கள் ஒருவருடன் கால் பேச வேண்டுமென்றால், வாய்ஸ்( Voice ) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்க மியூசிக் ( Music ) என்பதை தேர்வு செய்யுங்கள்.

இதைத்தவிர உங்கள் மொபைல் டைலரில் ( Dialer ) உள்ள செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் கால் செட்டிங்ஸ் ( Other call Settings ) என்பதை க்ளிக் செய்யவும் . அதில் ஹியரிங் அண்ட் கம்பேட்டபிலிட்டி ( Hearing and compatability) என்பதை ஆன் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினருடன் கால் பேசும்போது உங்களுக்கு தெளிவான ஆடியோ கிடைக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios