Youtube Tips: இப்படி கூட யூடியூப்பை பயன்படுத்தலாம் செய்யலாம்!
யூடியூபில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான 3 அம்சங்களை இங்கே காண்போம்.
யூடியூப் என்பது உலகின் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமாகும். உலகின் பெரும்பாலானோர் ஒவ்வொரு நாளும் யூடியூப்பில் செலவிடுகின்றனர். யூடியூப்பில் வெறும் வீடியோக்கள் மட்டும் இல்லை. அதோடு உங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களும் உள்ளன, அவற்றில் டாப் 3 பின்வருமாறு :
1. Search and Watch History
யூடியூபில் உங்கள் சர்ச் மற்றும் வாட்ச் ஹிஸ்டரியை பாஸ் ( Pause ) செய்யலாம். இதற்கு முதலில் உங்கள் யூடியூப் ப்ரொபைல் ஐகானை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் ஹிஸ்டரி அண்ட் பிரைவசி ( History and privacy ) என்பதை தேர்வு செய்யவும்.
அதில் பாஸ் வாட்ச் ஹிஸ்டரி அண்ட் பாஸ் சர்ச் ஹிஸ்டரி ( Pause watch history and Pause search history ) என்பதை ஆன் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பார்த்த வீடியோக்கள் மற்றும் சர்ச் செய்த விடியோக்கள் ஹிஸ்டரி பாஸ் செய்யப்படும். மேலும் இதனை நீங்கள் இன்காஜினிட்டோ மோடிலும் ( incognito mode ) பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. யுடியூபின் ஆட்டோ ப்ளே அம்சத்தை முடக்கலாம் :
யூடியூபில் வீடியோ முடியும் போது ஆட்டோ ப்ளே என்ற அம்சம் இயக்கப்பட்டு அடுத்தடுத்த வீடியோக்கள் பிளே செய்யப்படும். இதனால் பலர் இதற்கு அடிமைகளாகி விட்டனர். இதனைத் தடுக்க நீங்கள் ஆட்டோ ப்ளே ஆப்ஷனை முடக்கிக்கொள்ளலாம்.
இதற்கு முதலில் நீங்கள் யூடியூப் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். அதிலுள்ள ஆட்டோ ப்ளே மெனுவை ஓப்பன் செய்யவும். அதில் ஆட்டோ ப்ளே நெக்ஸ்ட் வீடியோ (Autoplay next video) என்பதை ஆஃப் செய்யவும்.
அடடே! WhatsApp-ல் இப்படி கூட வீடியோ அனுப்ப முடியுமா!!
3. ரிமைண்டரை செட் செய்து கொள்ளலாம் :
இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்கு பிறகு யூடியூபை தானாகவே முடக்கும் வகையில் ரிமைண்டரை செட் செய்து கொள்ளலாம். அதிகமாக டேட்டா விரயமாகிறது என்று நினைப்பவர்கள், இந்த அம்சத்தைப் பயன்படுத்தியும் டேட்டாவை மிச்சப்படுத்தலாம்.
இதற்கு உங்கள் மொபைலின் யூடியூப் செட்டிங்ஸ் பகுத்திக்கு செல்லவும். அதில் ஜென்ரல் என்பதை தேர்வு செய்யவும் (General). பிறகு Remind me to take a break என்பதை ஆன் செய்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பும் இடைவெளி நேரத்தை உள்ளிடவும்.
நீங்கள் இரவு நேரங்களில் அதிகமாக யூடியூப் பயன்படுத்துவதைத் தடுக்க ரிமைண்ட் மி வென் இட்ஸ் பெட் டைம் ( Remind me when it’s bedtime ) என்பதை தேர்வு செய்யலாம். இதனை ஆன் செய்த பிறகு உங்களால் இரவில் யூடியூபினை பயன்படுத்த இயலாது. யூடியூப்பில் அடிமையாகி இருப்பவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு யூடியூப் தளமே ஒரு வாய்ப்பு கொடுக்கிறது.