இன்ஸ்டால இப்படியும் ஒரு யூஸ் இருக்கா... 18 வருஷத்துக்கு முன் பிரிஞ்சவங்க ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
"தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றியுள்ளது என்பதை இன்று உணர்ந்தேன். இன்ஸ்டாகிராம் இன்று இல்லாமல் இருந்திருந்தால் எனது சகோதர் இன்று என் முன் வந்திருக்கமாட்டார்" என்று கண்ணீர் மல்க கூறுகிறார் ராஜ்குமாரி.
சமூக வலைத்தளங்களை ஒவ்வொருவரும் ஒரு விதமாக பயன்படுத்துவார்கள். அந்த வகையில் பிரிந்த சொந்தங்களையும் நண்பர்களையும் மீண்டும் சந்திப்பதற்கும் சமூக ஊடகங்கள் உதவிசெய்கின்றன. அப்படி ஒரு சம்பவம் இன்ஸ்டாகிராம் மூலம் நடந்துள்ளது.
18 வருட பிரிவிற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் தனது சகோதரருடன் மீண்டும் இணைந்த சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது. இவர்கள் மீண்டும் சந்திக்க முக்கியக் காரணமாக இருந்தது சகோதரரின் உடைந்த பல் தான்!
உத்தரப் பிரதேச மாநிலம் மஹராஜ்பூரின் ஹாதிபூர் கிராமத்தைச் சேர்ந்த பால் கோவிந்த் பல ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக மும்பைக்குச் சென்றார். ஆனால், 18 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பவில்லை. மும்பை செல்ல விரும்பிய பால் கோவிந்த் தவறான ரயிலில் ஏறியதால், அவர் ஜெய்ப்பூர் சென்றுவிட்டார்.
ஜெயப்பூரில் எதையும் புரிந்துகொள்ள முடியாமல் அலைந்து திரிந்தார். அங்கு அவர் ஒருவரைச் சந்தித்தார், அவர் பால் கோவிந்த்துக்கு வேலை கிடைக்க உதவி செய்தார். அங்கேயே குடியேறிய கோவிந்த், ஈஸ்வர் தேவி என்ற பெண்ணை மணந்தார்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தனர்.
OPPO A3 Pro: சான்சே இல்ல... வெற லெவல் டேமேஜ் ப்ரூஃப் பாடியுடன் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்
ஆனால், பால் கோவிந்த் சிறுவயதிலேயே வீட்டை விட்டுச் சென்றதால் அவரால் பழைய நினைவுகள் எதையும் நினைவுகூர முடியவில்லை. குடும்பம், வீடு அனைத்தையும் மறந்துவிட்டார். இந்நிலையில், பால் கோவிந்த் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருத்தார்.
அதுதான் அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஒரு நாள், அவரது சகோதரி ராஜ்குமாரி அவரது உடைந்த பல் தெரியும், வீடியோவைப் பார்த்துவிட்டு, அவர்தான் தனது சகோதரர் பால் கோவிந்த் என்று அடையாளம் கண்டுகொண்டார்.
ராஜ்குமாரி அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்புகொண்டு பழைய நினைவுகளைக் கூறினார். ஆரம்பத்தில் ராஜ்குமாரி கூறியதை அவர் நம்பவில்லரை. படிப்படியாக ராஜ்குமாரி கூறியதைக் கேட்டு அவருக்கு குழந்தைப் பருவப் நினைவுகள் மீண்டும் வந்தன. சில நினைவுகளை பால் கோவிந்த்தும் நினைவுபடுத்தினார்.
பிறகு ராஜ்குமாரி அவரை தனது சொந்த வீட்டிற்குத் திரும்பும்படி அழைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார். ஜூன் 20ஆம் தேதி ஹாதிபூரில் உள்ள தனது சகோதரியை நேரில் சென்று சந்தித்துள்ளார். பால் கோவிந்த் வீட்டை அடைந்ததும், வீட்டில் இருந்தவர்கள் எல்லை இல்லாத மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர். பால் கோவிந்த் தன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததைக் கண்டு ஊர்மக்களும் ஆனந்தம் அடைந்தனர்.
"தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றியுள்ளது என்பதை இன்று உணர்ந்தேன். இன்ஸ்டாகிராம் இன்று இல்லாமல் இருந்திருந்தால் எனது சகோதர் இன்று என் முன் வந்திருக்கமாட்டார்" என்று கண்ணீர் மல்க கூறுகிறார் ராஜ்குமாரி.
ஜியோ ரீசார்ஜ் கட்டணம் 25 சதவீதம் உயர்வு! அடேங்கப்பா... இந்த விலையில் புது பிளான் கட்டுப்படி ஆகுமா?