Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஆண்டில் 10,000 ஃப்ரெஷர்களுக்கு வேலை! HCL நிறுவனம் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

"இந்த ஆண்டுக்கான இலக்கை எடுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். 2025 நிதியாண்டில் 10,000 க்கும் மேற்பட்டவர்களைச் சேர்க்கலாம் என எதிர்பார்க்கிறோம்” என்று ஹெச்.சி.எல். கூறியுள்ளது.

HCLTech plans to hire over 10,000 freshers in 2024-25 sgb
Author
First Published Apr 27, 2024, 7:12 PM IST

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஹெச்.சி.எல். டெக் (HCL Tech), 2025 நிதியாண்டில் 10,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியில் சேர்க்க தயாராக உள்ளது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு சேர்ப்பதை தவிர்க்கும் நேரத்தில் ஹெச்.சி.எல். இந்த முடிவை எடுத்துள்ளது.

நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாய் மாநாட்டில் பேசிய சி.பி.ஓ. ராமச்சந்திரன் சுந்தரராஜன், “2025ஆம் நிதி ஆண்டில் சுமார் 10,000 பேரை சேர்க்க இருக்கிறோம். கடந்த காலாண்டில் செய்த ஆஃப்-கேம்பஸ் சுழற்சியில் இருந்து 10% க்கும் அதிகரித்துள்ளோம். இந்த காலாண்டிற்கான சுழற்சியில், அந்த திட்டத்தில் மேலும் 15 சதவீதம் பேருக்கு ஆஃபர் லெட்டர்களைக் கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

"இந்த ஆண்டுக்கான இலக்கை எடுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். 2025 நிதியாண்டில் 10,000 க்கும் மேற்பட்டவர்களைச் சேர்க்கலாம் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் கார்டே தேவை இல்ல... UPI பேமெண்டுக்கு ஆதார், போன் நம்பர் மட்டும் போதும்!

HCLTech plans to hire over 10,000 freshers in 2024-25 sgb

எச்.சி.எல். நிறுவனம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 2,725 பணியாளர்களை சேர்த்துள்ளது. நான்காவது காலாண்டில் சேர்க்கப்பட்டவர்களில் ஃப்ரெஷர்கள் எண்ணிக்கை 3,096. 2024-25 முழு ஆண்டிலும், மொத்தம் 12,141 புதியவர்களைச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2024-25 நான்காம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 227,481 ஆகும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) போன்ற நிறுவனங்கள் 2025ஆம் நிதி ஆண்டில் சுமார் 40,000 புதியவர்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் டெக் மஹிந்திரா நிறுவனம் 6,000 புதியவர்களைச் சேர்க்க இருப்பதாகக் கூறியது.

ஹெச்.சிஎல். அதன் நான்காம் காலாண்டு வருவாயை ஏப்ரல் 26 அன்று அறிவித்தது. அதில், நிகர லாபம் ரூ 3,986 கோடி என்று குறிப்பிட்டிருந்தது. 0.1 சதவீதம் வளர்ச்சியைக் குறிக்கிறது. 2024  நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 8.3 சதவீதம் அதிகரித்து ரூ. 109,913 கோடியாக உயர்ந்தது. நிகர லாபம் 5.7 சதவீதம் அதிகரித்து ரூ.15,702 கோடியாக உயர்ந்தது.

உங்க போன் டிஸ்ப்ளேயில் பச்சை கலர்ல கோடு தெரியுதா? இலவசமாவே ஸ்கிரீனை மாத்திக்கலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios