இந்தியா-பாகிஸ்தான் பதற்றமான சூழலில், அவசர எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் இந்த எச்சரிக்கைகளை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமையன்று இந்தியாவும், பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டன. இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீர் உட்பட பல இடங்களில் வெடிச்சத்தம் கேட்டது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வானில் ஏவுகணைகளைக் கண்டதாகவும், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அவசர எச்சரிக்கை நோட்டிபிகேஷன்

நெருக்கடியான காலங்களில், அரசிடமிருந்து நேரடியாக "அவசர எச்சரிக்கை" தகவல்களைப் பெறுவது மக்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் அவசர எச்சரிக்கை அறிவிப்புகளை இயக்குவதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு பயனர்கள்

உங்கள் தொலைபேசியில் செட்டிங்ஸ் செயலியை திறக்கவும். "பாதுகாப்பு மற்றும் அவசரநிலை (Safety and Emergency)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது அமைப்புகள் பயன்பாட்டின் தேடல் பட்டியில் "அவசர எச்சரிக்கை" என்று தேட முயற்சிக்கவும். பின்னர் “வயர்லெஸ் அவசர எச்சரிக்கைகள் (Wireless emergency alerts)” என்பதைக் கிளிக் செய்யவும். இங்குள்ள அனைத்து கிடைக்கக்கூடிய எச்சரிக்கை ஆப்ஷன்களையும் இயக்கவும். Samsung, Realme, OnePlus போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியின் பிராண்டைப் பொறுத்து மாறுபடும்.

ஐபோன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கைகள்

முதலில் “செட்டிங்ஸ்” செயலியைத் திறந்து உங்கள் அறிவிப்புகளுக்குச் செல்லவும். இங்கே “அரசு எச்சரிக்கைகள்” என்பதைக் கண்டுபிடிக்க கீழே ஸ்க்ரால் செய்யவும். அரசிடமிருந்து முக்கியமான புதுப்பிப்புகளைப் பெற சோதனை எச்சரிக்கைகளை இயக்க நடவடிக்கை பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இவை நாட்டின் அரசிடமிருந்து நேரடியாக வரும் எச்சரிக்கைகள், அவசர காலங்களில், இந்த எச்சரிக்கைகளை இயக்கத்தில் வைத்திருப்பது அவசியம் ஆகும்.