Asianet News TamilAsianet News Tamil

ஜனவரி முதல் Google Stadia சேவை நிறுத்தம்!

கூகுளின் கேமிங் சேவையான கூகுள் ஸ்டடியா ஜனவரி முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Shuts Down Its Streaming Play Games Service Stadia in January 2022
Author
First Published Sep 30, 2022, 10:39 PM IST

கடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் Stadia என்ற கேமிங் தளத்தை அறிமுகம் செய்தது.  இதை அறிமுகம் செய்த போது, பல்வேறு சிறப்பம்சங்களை தெரிவிக்கப்பட்டது. லேட்டன்சி பிரச்சனையே இருக்காது, பயனர்கள் தங்களுடைய சொந்த லைப்ரரியில் இருந்து விளையாடலாம் என்றெல்லாம் கூறியது. லேப்டாப்பில் இருந்தும் விளையாடலம், டேப்லேட் போனில் இருந்தும் விளையாடலாம் என்றெல்லாம் கூறியது. 

இந்த தயாரிப்பு இந்தியாவில் அவ்வளவு பிரபலமாக இல்லை என்றாலும், அமெரிக்காவில் பெருமளவு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், போதுமான வரவேற்பு பெறாத காரணத்தினால், வரும் ஜனவரி மாதத்தோடு ஸ்டடியா சேவை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஒரு புறம் கூகுள் நிறுவனம் வெற்றிகரமான பல தயாரிப்புகளைக் கொண்டிருந்தாலும், மறுபுறும் சில சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. பயனர்களின் வரவேற்பு இன்றி, பல தயாரிப்புகள் இதே போல் சேவை நிறுத்தம் செய்யப்பட்டன.

Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!!

குறிப்பாக கூகுளின் ஆர்குட் என்ற சமூகவலைதளம் முன்னொரு காலத்தில் மிகப்பிரபலமாக இருந்தது. பின்பு, ஃபேஸ்புக் வந்ததால், பயனர்களின் கவனம் ஃபேஸ்புக் பக்கம் திரும்பியது. இதனால் கூகுள் ஆர்குட் சேவை நிறுத்தப்பட்டது. கூகுள் ஹேங்அவுட்ஸ் சேவையும் நிறுத்தி, கூகுள் சாட் என்று கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக கூகுள் டாக், ஐகூகுள், கூகுள் ரீடர், கூகுள் நோட்புக், கூகுள் லேப்ஸ், கூகுள் ஆன்ஸ்ரஸ் உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios