புத்தம் புதிய அம்சங்களுடன் Chrome OS 107 அப்டேட்

கூகுள் குரோம் புதிதாக Chrome Os 107 என்ற அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் ,நிறைகுறைகளை இங்குக் காணலாம்.
 

Google rolls out ChromeOS 107: Check Latest New features in Chrome desktop users

உலகெங்கும் உள்ள மக்கள் அனைவராலும் உபயோகிக்கப்படும் கூகுள் குரோம் புதுப் புது வெர்சன்களை கொண்டுவருகிறது. அதன்படி அட்டகாசமான அம்சங்களுடன் டெக்ஸ்க்டாப் பயனர்களுக்காக இந்த வாரம் குரோமின் புதிய வெர்சன் குரோம் 107 அறிமுகம் செய்யப்பட்டது.. இது குறித்த விவரங்களை இங்கே காண்போம்.

டெக்ஸ்டாப்பில் வீடியோ கான்ஃபெரென்சிங் அம்சங்கள் :

கூகுள் வீடியோ கான்ஃபெரென்சிங் கருவிகளை ஒரே பட்டன் வழியாக வழங்குகிறது. இதனை நீங்கள் உங்கள் டீமுடன் எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். மேலும் நீங்கள்  வீடியோ கான்ஃபெரென்சிங்கில் இருக்கும்போது தவறுதலாக ஏதுனும் டேப்களை ஷேர் செய்து விட்டால் கூகுள் பிரவுசர் ஒரு எச்சரிக்கையை வழங்குகிறது. 

HEVC வன்பொருள் ( Hardware ) டீகோடிங் :

கூகுள் தனது சொந்த வீடியோ வன்பொருளான ஹை எஃபிசியன்சி வீடியோ கோடிங்கை ( The High Efficiency Video Coding ( HEVC) )  சோதித்து வருகிறது. இதனை H.265 எனவும் வழங்குவர். சிறந்த செயல்திறனை வழங்க கூகுள் குரோம் 107 ஆனது HEVC வன்பொருள் டீகோடிங்கை ஆதரிக்கிறது.
ஆண்ட்ராய்டு 5 , மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள், macOS 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள் மற்றும் Chrome OS மற்றும் Windows இல் வன்பொருள் டீகோடிங்கை வழங்கும் அனைத்து தளங்களிலும் இந்த அம்சம் கிடைக்கிறது.

200MP கேமராவுடன் வெளியான Redmi Note 12 Pro Plus ஸ்மார்ட்போன்!

எளிமையான உள்நுழைவு ( Login ) பயனர்களுக்கான அம்சம் :

கூகுள், பாஸ்வேர்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிற்கு சாவி உள்ளது போல நம்பகமான கேட்ஜெட்டுகளை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இது போன்ற மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு சிறிது காலமாகும். 

மேலும் நீங்கள் எந்த வலை தளத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்நுழைவு வகைக்கு இடையே மாற வேண்டியிருக்கும். குரோம் 107 இந்தச் சிக்கலைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் கடவுச் சாவியை ( Passkey ) முதலில் காட்டுவதன் மூலம் உள்நுழையுமாறு உங்களை அனுமதிக்கிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios