Google.com தளத்தில் புதிய வசதி.. உடனே என்னனு பாருங்க!
கூகுள் தேடலின் முகப்புப் பக்கத்தில் புதிதாக ஒரு தேடல் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது என்ன அம்சம், இதனால் என்ன பலன் என்பது குறித்து விரிவாக இங்குக் காணலாம்.
கூகுள் நிறுவனம் தனது பயனர்கள் பலன்பெறும் வகையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புதுப்புது வசதிகளை கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ‘கூகுள் லென்ஸ்’ என்ற அம்சம் முகப்புப் பக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பார்க்கும் ஒரு விஷயத்தை போட்டோ எடுத்து, அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
கூகுள் லென்ஸ்:
கூகுள் லென்ஸ் என்பது புதியதொரு தேடல் அம்சமாகும். இதுவரையில் கூகுள் லென்ஸ் என்பது செயலி வடிவத்தில் இருந்து வந்தது. இதன் மூலம் நேரில் நாம் பார்க்கும் ஒரு பொருளை, படம் பிடித்து அந்த பொருளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மரத்தையோ, செடியையோ பார்க்கிறீர்கள், அது என்ன செடி என்று தெரியவில்லை என்றால், உடனே கூகுள் லென்ஸை கிளிக் செய்து உங்கள் கேமராவில் போட்டோ எடுத்தால் போதும். அடுத்த கணமே அது என்ன வகையான செடி, அதன் பெயர் என்ன உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் காட்டப்படும். சுருக்கமாக கூறினால், தரையில் இருப்பது எல்லாம் திரையில் பார்க்கலாம்.
டுவிட்டரில் இனி யார் வேண்டுமானாலும் Blue Tick பெறலாம்; ஆனா ரூ. 660 செலுத்தனும் எலான் மஸ்க் அதிரடி!!
கூகுள் லென்ஸ் தற்போது கூகுளின் முகப்புப் பக்கத்திலேயே, அதுவும் Search Bar அருகிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் லென்ஸ் டெவலப்பர் அதிகாரி ராஜன் பட்டேல் ஒரு டுவீட் செய்துள்ளார்.
அதில் அவர், கூகுள் முகப்புப்பக்கம் என்பது அடிக்கடி மாறுவதில்லை, ஆனால், இன்று அது மாறிவிட்டது. உங்கள் சந்தேகங்களை விரிவுபடுத்தவும், அவற்றுக்கு நாங்கள் பதிலளிக்கும் விதத்தை மேம்படுத்தவும் நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் போட்டோ அப்லோடு செய்வதன் மூலமாக கேள்வி கேட்கலாம், நாங்கள் அதற்கு பதிலளிக்கிறோம்’ என்றவாறு டுவிட் செய்துள்ளார்.