Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டரில் இனி யார் வேண்டுமானாலும் Blue Tick பெறலாம்; ஆனா ரூ. 660 செலுத்தனும் எலான் மஸ்க் அதிரடி!!

டுவிட்டரில் பிரபலங்கள், அதிகாரிகள் மட்டுமே பெற்றிருந்த Blue Tick குறியீடை, இனி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Elon Musk announced $8 per Month for Twitter Blue Tick Verification After Backlash to Reported $20 Fee
Author
First Published Nov 2, 2022, 8:40 AM IST

பிரபல முதலீட்டாளரும் பணக்காரரமான எலான் மஸ்க் கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் சரிபார்ப்பு குறியீடை சாமானிய மக்களும் பெறலாம் என்றும், இதை  மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 660 ரூபாய்) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் சில டுவீட்களை செய்துள்ளார். அதில் அவர்,  ‘டுவிட்டரில் தற்போதைய பிரபலங்கள், அதிகாரிகள் மட்டும் நீல நிற சரிபார்ப்பு குறீயடை வைத்திருப்பது/இல்லாமல் இருப்பது என்பது முட்டாள் தனமானது. அதிகாரம் என்பது மக்களிடத்தில், நீல நிற குறியீடுக்கு மாதம் $8 செலுத்தினால் போதும். சாமானியர்களுக்கும் ப்ளூ டிக் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்... ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் பெயருக்கு கீழ் அவர்களது பதவியின் பெயர் (Tag Name) இருப்பது போல், மற்ற பிரபலங்களுக்கும் பெயர்களுக்கு கீழ் Tag Name பெறுவார்கள்.  ப்ளூ டிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் கட்டணமா என்று குறை கூறுபவர்கள், குறை கூறி கொண்டே இருக்கட்டும். ஆனால், கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு அதிரடியான மாற்றங்களும், விமர்சனங்களும் எழுகிறது. ஏற்கெனவே டுவிட்டரில் சிஇஓ, சிஎஃப்ஓ பதவியில் இருந்தவர்கள் நீக்கப்பட்டனர். மேலும் பல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படியான சூழலில் டுவிட்டரின் வருமானத்தையும், செயல்பாடுகளையும் பன்மடங்காக்கும் வகையில் எலான் மஸ்கின் நடவடிக்கைகள் உள்ளன. இதுவரையில் மற்ற எந்த சமூகவலைதளங்களுக்கும் இல்லாத வகையில் கட்டணம் வசூல் செய்யும் முறை டுவிட்டரில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், விளம்பரதாரர்களுக்கும் அவர்களது பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios