Google Security : கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? இனிமே அக்கவுன்ட்டை மீட்க, ஒரு செல்ஃபி வீடியோ எடுத்தா போதும். இந்த புதிய பாதுகாப்பு வசதி மூலமா, AI தொழில்நுட்பம் உங்க முகத்தை வெச்சு நீங்கதான்னு உறுதி செய்யும்.

Google account recovery : நம்மளோட கூகுள் அக்கவுன்ட்ல சில சமயம் லாகின் பண்ண முடியாம கஷ்டப்படுவோம். இந்த மாதிரி நேரத்துல உதவுறதுக்கு கூகுள் ஒரு புது பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்திருக்கு. அதுதான் 'செல்ஃபி வீடியோ' ஃபீச்சர். இது மூலமா, உங்க முகத்தை ஒரு சின்ன வீடியோ எடுத்து, உங்க அக்கவுன்ட்டை ஈஸியா மீட்கலாம். நீங்க வழக்கமா பயன்படுத்துற போன் அல்லது கம்ப்யூட்டர் கையில இல்லாதப்போ, உங்க அடையாளத்தை உறுதி செய்ய இந்த வசதி ரொம்ப உதவியா இருக்கும்.

செல்ஃபி வீடியோ எப்படி வேலை செய்யுது?

கூகுள் அக்கவுன்ட் செட்டிங்ஸ்ல இருக்குற 'Security and Sign-in' பகுதிக்கு போகணும். அங்க செல்ஃபி வீடியோ ஆப்ஷனை செலக்ட் பண்ணனும். அதுக்கப்புறம், உங்க போன் கேமரா முன்னாடி நின்னு, ஸ்கிரீன்ல வர்ற பரிந்துரைகளப் பின்பற்றணும். அதாவது, தலையை லேசா அசைக்கச் சொல்லும். இப்படி செய்யும்போது, உங்க முகத்தோட பல கோணங்களை அது வீடியோ எடுத்துக்கும். இத வச்சு, அக்கவுன்ட்டை பயன்படுத்துறது நிஜமான நபர்தானான்னு கூகுள் சிஸ்டம் செக் பண்ணிடும்.

இதையும் படியுங்கள்…. Google 400GB: கூகுள் போட்டோஸ், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சூப்பர் அப்டேட்.. அடிச்சது ஜாக்பாட்

அடையாளத்தை உறுதி செய்ய AI

இந்த செல்ஃபி வீடியோவை செக் பண்றதுக்கு கூகுள் ஒரு ஸ்பெஷல் AI மாடலைப் பயன்படுத்துது. நீங்க ஒரு உண்மையான நபர்தானா, சில கூகுள் சேவைகளைப் பயன்படுத்தத் தேவையான வயசு உங்களுக்கு இருக்கா போன்ற விஷயங்களை இது சரிபார்க்கும். எதிர்காலத்துல உங்க அக்கவுன்ட் லாக் ஆனா, அப்போ ஒரு புது செல்ஃபி வீடியோ எடுக்கணும். அந்த வீடியோவை, ஏற்கனவே சேமிச்சு வெச்ச வீடியோவோட ஒப்பிட்டுப் பார்த்துதான் உங்க அடையாளத்தை உறுதி செய்வாங்க.

வீடியோ பாதுகாப்பா இருக்கும்னு கூகுள் உறுதி

பயனர்களோட பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா கூகுள் சொல்லியிருக்கு. உங்க அனுமதியோடதான் இந்த வீடியோ ரெக்கார்ட் செய்யப்படும். அதுவும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, ரொம்ப பாதுகாப்பா சேமிக்கப்படும்னு கம்பெனி சொல்லுது. இந்த செல்ஃபி வீடியோவும், அது சம்பந்தப்பட்ட தகவல்களும் உங்க கூகுள் அக்கவுன்ட்ல இருக்குற செக்யூரிட்டி செட்டிங்ஸ்ல சேவ் ஆகும். உங்களுக்கு தேவைப்பட்டா, இந்த வீடியோவை எப்ப வேணும்னாலும் நீங்களே டெலிட் பண்ணிக்கலாம்.

சந்தேகமான லாகின்களைத் தடுக்க புது முயற்சி

சந்தேகத்துக்குரிய லாகின் முயற்சிகளைக் கண்டுபிடிச்சு தடுக்க, கூகுள் ஏற்கனவே பல பாதுகாப்பு வழிகளைப் பயன்படுத்துது. அதோட ஒரு பகுதியாத்தான் இந்த செல்ஃபி வீடியோ வசதியும் வந்திருக்கு. சில சமயங்கள்ல, நீங்க உண்மையிலேயே கேமரா முன்னாடிதான் இருக்கீங்களான்னு உறுதி செய்ய, தலையை அசைக்கச் சொல்றது மாதிரியான சின்ன சின்ன பரிந்துரைகளைக் கொடுக்கலாம்.

டிஜிட்டல் அக்கவுன்ட்களோட பாதுகாப்பை இன்னும் அதிகமாக்குறதுக்கான ஒரு முயற்சிதான் இது. பாஸ்வேர்டை மறந்துட்டா, அல்லது வழக்கமான வழிகள்ல லாகின் பண்ண முடியாமப் போனா, பயனர்கள் அவங்க அக்கவுன்ட்டை சுலபமா மீட்கணும்ங்கிறதுதான் இதோட முக்கிய நோக்கம்.

Google Search: கூகுளில் இந்த 5 விஷயங்களை தெரியாம கூட சர்ச் பண்ணிடாதீங்க.. ரொம்ப டேஞ்சர்!