MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Google Search: கூகுளில் இந்த 5 விஷயங்களை தெரியாம கூட சர்ச் பண்ணிடாதீங்க.. ரொம்ப டேஞ்சர்!

Google Search: கூகுளில் இந்த 5 விஷயங்களை தெரியாம கூட சர்ச் பண்ணிடாதீங்க.. ரொம்ப டேஞ்சர்!

Google Search: கூகுளில் குறிப்பிட்ட 5 விஷயங்களை நீங்கள் சர்ச் செய்தால் அதாவது தேடினால் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 14 2026, 09:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூகுளில் தேடக் கூடாத 5 விஷயங்கள்
Image Credit : Getty

கூகுளில் தேடக் கூடாத 5 விஷயங்கள்

நம்மில் பலருக்கும் காலை விடிந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு உற்ற தோழனாக கூகுள் மாறி விட்டது. சமையல் குறிப்பு முதல் உலக நடப்பு வரை எதை வேண்டுமானாலும் நாம் கூகுளில் தேடி விடை காண்கிறோம். ஆனால், "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதைப் போல, கூகுளில் நாம் செய்யும் சில தேடல்கள் நம்மையே ஆபத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும். கூகுளில் நீங்கள் ஒருபோதும் தேடக் கூடாத 5 முக்கிய விஷயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்கள்
Image Credit : Getty

வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்கள்

அவசரத்திற்கு வங்கியையோ அல்லது ஏதேனும் ஒரு முன்னணி நிறுவனத்தையோ தொடர்பு கொள்ள நினைத்து, கூகுளில் 'Customer Care Number' என்று தேடுவது மிகப்பெரிய ஆபத்து. ஆன்லைன் மோசடி பேர்வழிகள் போலி எண்களை கூகுள் தேடல் முடிவுகளில் வரவழைத்து காத்திருப்பார்கள். நீங்கள் அதை உண்மை என நம்பி அழைத்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் மொத்தமாக காலியாகி விடும்.

இலவச சார்ப்ட்வேர்

"காசு கொடுத்து இந்த சாஃப்ட்வேரை யார் வாங்குவது? கூகுளில் இலவசமாக டவுன்லோட் செய்துவிடலாம்" என்று நினைத்தால் அது உங்கள் கணினி அல்லது மொபைலின் ஆயுளுக்கே ஆபத்து. 'Free premium software' அல்லது 'Cracked version' என்று தேடி நீங்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகளில் (Files) ஆபத்தான வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் ரான்சம்வேர்கள் மறைந்திருக்கலாம். இவை உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடி உங்களை மிரட்டப் பயன்படுத்தப்படலாம்.

ஸ்மார்ட் டிப்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது Google Play Store, Apple App Store போன்ற பாதுகாப்பான தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

Related Articles

Related image1
கூகுள் பிக்சல் லேப்டாப் வருது.. MacBook-க்கு நேரடி போட்டி.. ஆரம்பமே அசத்தல்.!
Related image2
Google 400GB: கூகுள் போட்டோஸ், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சூப்பர் அப்டேட்.. அடிச்சது ஜாக்பாட்
34
சுய மருத்துவம்
Image Credit : Getty

சுய மருத்துவம்

தலைவலி, காய்ச்சல் அல்லது ஏதேனும் ஒரு சாதாரண உடல் உபாதை என்றால் உடனே கூகுளிடம் ஓடாதீர்கள். கூகுளில் ஒரு சாதாரண தலைவலியைப் பற்றித் தேடினால் கூட, அது ஏதோ பெரிய ஆபத்தான நோய் என்பது போன்ற தேவையற்ற பயத்தை உங்களுக்குள் விதைத்துவிடும். கூகுள் ஒரு தேடுபொறியே தவிர, அது ஒரு மருத்துவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் டிப்ஸ்: உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் தகுதியான மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே உங்களுக்கும், உங்கள் மன அமைதிக்கும் நல்லது.

பேராசை காட்டும் முதலீட்டு ஆலோசனைகள்

"பணத்தை இரட்டிப்பாக்க எளிய வழி", "குறைந்த நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?" அல்லது "உறுதியான பங்குச்சந்தை லாபம்" போன்ற வார்த்தைகளை கூகுளில் தேடுவது, நீங்களாகவே சென்று ஏமாற்றுக்காரர்களிடம் மாட்டிக்கொள்வதற்குச் சமம். இத்தகைய தேடல்கள் உங்களை போலியான கிரிப்டோகரன்சி திட்டங்கள், போன்சி ஸ்கீம்கள் மற்றும் ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி வலைதளங்களுக்குக் கொண்டு சேர்க்கும்.

ஸ்மார்ட் டிப்ஸ்: நிதி சார்ந்த முதலீடுகளைச் செய்வதற்கு முன், ரிசர்வ் வங்கி (RBI) அல்லது செபி (SEBI) போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

44
உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள்
Image Credit : Getty

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள்

விளையாட்டாகவோ அல்லது ஆர்வம் காரணமாகவோ உங்களது சொந்த மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் அல்லது அடையாள அட்டை விவரங்களை கூகுளில் தேட வேண்டாம். இப்படித் தேடுவதன் மூலம் உங்களைப் பற்றிய தரவுகள் இணையத்தில் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்ற தேவையற்ற பதற்றமே மிஞ்சும். மேலும், தேவையில்லாத தேர்ட்-பார்ட்டி தளங்கள் உங்கள் விவரங்களைக் கண்காணிக்க இது வழிவகுக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கூகிள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Honor 10000mAh Battery: அடேங்கப்பா! 10,000mAh பேட்டரி, 10,000 நிட்ஸ் டிஸ்ப்ளே... Honor-இன் அடுத்த போன் மிரட்டலா இருக்கு
Recommended image2
அடேங்கப்பா..! 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால், 1000 SMS – Jioவின் இந்த பிளான் பலருக்கும் தெரியாது
Recommended image3
Meta Mega Outage: ஒரே நேரத்தில் 'அவுட்' ஆன இன்ஸ்டா, பேஸ்புக்.. பதறிய பயனர்கள்.. பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
கூகுள் பிக்சல் லேப்டாப் வருது.. MacBook-க்கு நேரடி போட்டி.. ஆரம்பமே அசத்தல்.!
Recommended image2
Google 400GB: கூகுள் போட்டோஸ், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சூப்பர் அப்டேட்.. அடிச்சது ஜாக்பாட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved