ஆபத்தான 29 ஆப்கள்... கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!!
ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை திருடும் ஆப்களை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கிவிடும்படி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை திருடும் ஆப்களை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கிவிடும்படி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை சில ஆப்கள் திருடுவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகைப்படங்களை அழகுபடுத்தும் மற்றும் கேமரா தொடர்பான 29 ஆப்கள் கூகுள் பிளேஸ்டோரில் கண்டறியப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டன. இந்த ஆப்களை டவுண்லோடு செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவைகள் ஆபத்தானவை என கருதி பிளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
இந்த ஆப்களை தங்கள் ஃபோன்களில் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை நீக்கி விடும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
ஆபத்தான 29 ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1. Fill art photo editor, 2. Prizma Photo Effect, 3. Cartoon Art Photo, 4. Wallpapers HD, 5. Super Camera, 6. Photo Art Effect, 7. Art Effect, 8. Selfie Camera Pro, 9. Pro Camera Beauty, 10. Pixture, 11. Photo Editor, 12. Magic Art Filter Photo Editor, 13.Horizon Beauty Camera, 14. Art Filter, 15.Emoji Camera, 16. Art Filter Photo, 17.Cartoon Photo Filter, 18.Art Filter Photo Effects, 19.Cartoon Effect, 20.Cartoon Art Photo, 21.Art Filter Photo Editor, 22. Cartoon Art Photo Filter, 23. Beauty Camera, 24. Awesome Cartoon Art, 25.Artistic Effect Filter, 26.Art Flip Photo Editing, 27.Art Effect, 28.Art Effect For Photo, 29.Art Editor ஆகியவை ஆபத்தான ஆப்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.