இந்தியாவில் கிட்ஹப் டெவலப்பர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதாக அந்நிறுத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் டோம்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக உள்ளது என்று கிட்ஹப் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் டோம்கே கூறியுள்ளார். "இந்தியாவில் டெவலப்பர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அவர்கள் AI-யின் உதவியுடன் AI-யை உருவாக்குகிறார்கள். இதனால் அடுத்த பெரிய பன்னாட்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

கிட்ஹப் என்பது ஒரு பிரபலமான டெவலப்பர்களுக்கான தளம். இந்தியாவில் 1.7 கோடிக்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் GitHub-ஐப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 1.32 கோடி கிட்ஹப் டெவலப்பர்கள் இருந்தனர், இந்த ஆண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்தியாவின் அதிக மக்கள் தொகை, கணினி அறிவியல், பொறியியல் திறன் கொண்ட மாணவர்களே இதற்குக் காரணம்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா

கிட்ஹப்-க்கு இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாகும். உலகின் இரண்டாவது பெரிய இணைய சந்தையும் இதுவே. அமெரிக்காவில் 2.2 கோடிக்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் உள்ளனர். கிட்ஹப் கல்வி பயனர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பொது ஜெனரேட்டிவ் AI திட்டங்களில் இந்தியாவிலிருந்து அதிகமானோர் பங்களிக்கின்றனர். இதன் மூலம் இந்தியா உலக தொழில்நுட்பத்தில் எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கிட்ஹப் தலைமை நிர்வாக தாமஸ் டோம்கே கூறுகையில், “எங்களின் அக்டோபர் அறிக்கையின்படி, இந்தியாவில் டெவலப்பர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா உலக தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. இந்திய டெவலப்பர்கள் AI-யின் உதவியுடன் AI-யை உருவாக்குகிறார்கள். இதனால் அடுத்த பெரிய பன்னாட்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வரக்கூடும்” என்று கூறினார்.